பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 19

நான்கு திங்களோடு நின்றுவிடாது, ஐந்தாவது திங்கள் 'திருவள்ளுவர் சைவ சமயியே என்ற வாய்க்கு ஆப்பு' என்று வரும். திருவள்ளுவர் வைணவ சமயியே என்ற வாய்க்கு ஆப்பு' பிறகு ஆப்புக்கு ஆப்பு: ஆப்புக்கு மறுப்பு மறுப்புக்கு ஆப்பு; மறுப்புக்கு மறுப்பு என்பவை களே! அன்றைக்கு தமிழகத்திலே இருந்த புலவர்கள் திருவள்ளுவரது சமயத்தைக் காணத் தங்களது அறிவைத் திட்டினார்களே தவிர திருவள்ளுவரைக் காணத் தீட்ட வில்லை. தீட்டியிருந்தால் அன்றைக்கே பொதுவுடை மையாயிருந்திருக்கும் திருக்குறள்.

திருவள்ளுவர் சமயம் அந்தக் காலத்திலே இத்தனை பேருடைய சண்டையாக மட்டும் இருந்தது.இப்பொழுது வந்திருக்கும் ஆபத்து மிகப் பெரியது. கிறிஸ்தவரா? இப்பொழுது திருவள்ளுவர் கிறிஸ்தவ - சமயியே என்று வந்திருக்கிறது இந்த விபத்து முன்னே வரவில்லை. அவர்கள் இரண்டு பேரும் ஒரே நூற்றாண்டில் 31 ஆண்டுகளுக்குள் முன்பின்னாகத் தோன்றியவர்கள். இயேசுநாதருடைய போதனையும் திருவள்ளுவருடைய போதனையும் ஒன்றாகவே இருக் கிறது. இரண்டு பேர்களும் குற்றம் செய்தவர்களை மன்னித்துத் திரும்பவும் உதவி செய்யுங்கள் என்றே கூறி இருக்கிறார்கள். பிற போதனைகளும் ஒன்றாகவே தோன்றுகின்றன. இரண்டு பேர்களும் ஒரே கண்டத்தில் பிறந்தவர்கள் என்றெல்லாம் காரணம் காட்டுகிறார்கள். அந்த அளவோடும் போராட்டம் நின்றுவிடவில்லை.

இப்பொழுது எங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியப்புலவர் இருக்கிறார். அவர் திருவள்ளுவர் இஸ்லாம் சமயியே என்ற போராட்டத்தைத் தொடங்கி இஸ்லாமியரா? யிருக்கிறார் (சிரிப்பு). மற்ற ஆட்களெல் லாம் சும்மா பேசுவார்கள். இவர் சட் டையைத் தூக்கிக்கொண்டு சண்டைக்கு வருவது