பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வள்ளுவரும் குறளும்

போலவே பேசுவார். ஏய்யா, இந்த ன்னன்னா' என்ன செய்தது? உங்களை ஒன்றும் செய்யவில்லையே. பின்பு ஏன் அழித்தீர்கள்? நாங்கள் அழிக்கவில்லையே. பின்னே எப்படி வந்தது திருக்குறள்? என்னையா சொல்லுகிறது ஒன்றும் தெரியவில்லை என்போம். 'ன்னன்னா' என் னய்யா செய்தது? அந்த 'ன்னன்னா'விலே நடுவிலே இருக்கிறது சுழி உங்களை என்ன பண்ணிற்று? என்று கேட்பார், 'பாய்? நீங்கள் சொல்லுகிறது ஒன்றும் விளங்கவில்லை' என்போம். திருக்குரான் என்று இருந் தது. அந்த ன்னன்னாவிலுள்ள சுழியை அழித்துவிட்டுத் திருக்குறள் என்று வைத்துக் கொண்டீர்களே என்று சண்டைக்கு வருவார். (சிரிப்பு)

திருவள்ளுவருடைய சமயப் போராட்டம் இந்த அளவிற்கு வந்திருக்கிறது. இப்பொழுது உங்களுக்குத் திருவள்ளுவருடைய சமயம் விளங்கி என்ன சமயம்? யிருக்குமே நான் சொல்லியதிலிருந்து. என்ன சமயம் அது? எல்லாச் சமயத் தாரும் தங்கள் சமயத்தார் என்று கருதக்கூடிய ஒரு சமரச சமயத்தார். திருவள்ளுவர் என்பது இந்த அளவு போதும் அவரது சமயத்தைக் கூற.

அவருடைய கொள்கை என்ன? எண்ணி வைத்திட லாம் இறைவன் என்று ஒன்று உண்டு என்று நம்பு. அதை வணங்காவிட்டால் கற்றும் பயனில்லை மழை யானது மக்கள் போற்ற வேண்டிய ஒன்று. ஏனெனில் அது உண்ணும் பொருள்களை உண்டாக்கிக் கொடுத்துத் தானும் உணவாக மாறுகிறது. பெரி அவரது கொள்கை யோர்களைப் போற்றுங்கள்.மனைவி மக்களோடு வாழுங்கள். விருப்பு, வெறுப்பு அற்று வாழுங்கள். இது ஒரு தொகுப்பு.

படி, படிக்க வேண்டியவைகளைப் படி! குற்றமறப் படி, படிக்கவிட்டாலும் கேள்: படித்து, கேட்டு அறிந்த படி நட: இது ஒரு தொகுப்பு.