பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 35

திரும்பி வராதவை-கிடைத்தன. ஒன்று திரும்ப வராது ஒழுக்கம், மானம் இழந்தால் திரும்பி வராது மற்றொன்று உயிர் போனால் திரும்பி வராதென்று கண்டுபிடித்தார். அவர் ஆக போனால் திரும்பி வராத ஒழுக்கத்திற்காக உவமை கூற, போனால் திரும்பி வராத உயிரை வைத்து 'உயிரைக் காப்பாற்றுகிறமாதிரி ஒழுக்கத்தைக் காப்பாற்று என்று கூறினார் சரி, எனக் கேட்டுக்கொண்டு திரும்பிப் போனான், இவருக்கு ஐயப்பாடு வந்துவிட்டது. டேய் டேய் இங்க வா! என்று கூப்பிட்டார் வந்தான். அவ ருக்கு வந்த சந்தேகம் என்ன; விஞ்ஞானம் வளர்கிறது. இன்றைக்கில்லாவிட்டாலும், 1985-ல் எந்த விஞ்ஞானி யாவது செத்துப் போனவனைப் பிழைக்கவைக்கக் கண்டு பிடித்து விட்டால் சந்தேகம் வந்துவிட்டது. இப்பவே எழுந்திருக்கிறது. உட்காருது, 3 நிமிடம் பேசுது, 7 நிமிடம் பேசுது என்கிறானே! இனிமேல் எழுந்திருந்து நடக்க ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்துவிட்டால்; ஆகையி னாலே அவர் என்ன பண்ணினார்? இறந்து போன உயிரை மீண்டும் திரும்பக் கொண்டுவர எந்த விஞ்ஞானி பாகிலும் கண்டுபிடித்து விடுவான். ஆனால், இழந்த மானத்தைத் திரும்பக் கொண்டுவர எந்த விஞ்ஞானியா லும் முடியாது என்று வள்ளுவர் கண்டுபிடித்தர்.

கண்டுபிடித்து என்ன சொன்னார்? உயிரைக் காப் பாற்றுவது போல் ஒழுக்கத்தைக் காப்பாற்று என்று சொன்னவர், அதை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்று வதைவிட அதிகமாக ஒழுக்கத்தைக் க்கார் காப்பாற்று என் 'ம்'மன்னா ஒன் או கண்டு பிடித்தார் அது ಘೀ: | ரினும் ஒம்பப்படும்' என்று, இப்பொழுது தெரிகிறதா? உங்களுக்குக் குறள்! 'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக் கம் உயிரினும் ஒம்பப்படும்.’’ எவ்வளவு சிறந்த கருத்துக் களை எவ்வள்வு. உயர்ந்த சொற்களால்ே, எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார், பாருங்கள்!