பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 53

இப்போது உன் உயரம் இருக்கிறான். அடித்தான். பல்லு உதிர்கிறது. கமலம்! அவ்வளவு வலுவு இருக்குது அவனுக்கு (சிரிப்பு). பெற்ற வயிறு: எந்தக் குற்றம் செய் தாலும் தாய் பொறுப்பாளாம். சான்றோர் சிறு குற்றம் செய்தாலும் பொறுக்க மாட்டாராம். இப்படி இலக்கணம் கூறிக் காட்டுகிறார்.

எந்தக் குற்றம் செய்தாலும் பொறுக்கின்ற தாய்கூட தன் மகன் குடித்திருக்கிறானென்றால், 'தூ' என்று துப்பி வெறுத்துவிடுவாளாம். ஏன்?

២៧ឃុវើ மற்றக் குற்றமெல்லாம் கேட்டுப் பார்ப் பொறுக்க பது. நம்புவது; இது கண்ணிற்கு மாட்டாள் முன்னே தெரிவது. ஐயோ! என் மகன்

குடித்து விட்டானே! அறிவு இழந்து விடு வானே! குடிப்பெருமை போச்சே! நாட்டுக்கு உதவானே! பாழ்பட்டுப் போனானே! அவனைப் பெற்ற வயிறு பற்றி எரியுதே என்று கூறி, நீ என் பிள்ளையா? நான் உன்னைப் பெற்ற தாயா? போ' என்று வெறுத்துவிடுவாளாம். இப்போது கேட்கின்றார் கேள்வி வள்ளுவர் நம்மிடத்தில் வந்து. எந்தக் குற்றம் செய்தாலும் பொறுக்கின்ற தாய் முன்பு கூட குடி வெறுக்கப்படுமானால் ஒரு சிறு குற்றங்கூடப் பொறுக்க மாட்டாத அறிவாளிகள் முன்னே குடிகாரன் என்ன ஆவான்? என்று கேட்கிறார். நீங்கள்தான் சொல்லுங் களேன் பதில். குறள் வேண்டுமா?

'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி?"

பெற்ற தாயின் முன்கூடக் குடி வெறுக்கப்படுமானால், மற்று என்ன ஆகும். சான்றோர் முகத்துக் களி அறிவாளி கள் முன்னே இவன் என்ன ஆவான்? எவ்வளவுபெரிய கருத்து? பாருங்கள். இவைகளையெல்லாம் நீங்கள் படித்து அறிய வேண்டும். -