பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 57

என்று துறவிகள் இரண்டு பிரிவு. 'ஏ' ஒன்று 'பி' ஒன்று. இந்த 'ஏ' பிரிவு, அடியோடு மழுங்க மொட்டை படித்துக் கொள்வார்கள் (சிரிப்பு) பி பிரிவு நீளமாய்ச் சடையை வளர்த்துப் பிரிமனை மாதிரித் தலையிற் சுற்றி, அதன்மீது காவித் துணியைக் கட்டிக் கொண்டிருப்பார் கள். வள்ளுவர் சொல்லுகிறார்: உண்மையான துறவி களுக்கு இந்த இரண்டு வேடமும் தேவையில்லை, உலகம் பழிக்கின்ற தவறான செயல்களை ஒழித்துவிடுவது ஒன்றே துறவிகளுக்கு வேண்டுவது' என்று கூறுகிறார். 'மழித்தலும் நீட்டலும் வேண் டாம்’-எப்போது? 'உலகம் பழித்தது ஒழித்துவிடின், மழித்தலும் நீட்ட லும் வேண்டாம் என்று துறவிக்குச் சொன்னார்-இப்போது நான் உங்களைக் கேட்கிறேன்.- மிகவும் நீளமாக வளர்க் காதே. மொட்டையும் அடித்துக் கொள்ளாதே' என்றால், கிராப் பண்ணிக்கொள் என்றுதானே பொருள்! (சிரிப்பு). இம் மாதிரியான குறள்கள் மாணவர்களுக்குப் பொருட் செறிவோடு நகைச்சுவையும் அளிப்பதாக இருக்கும்.

இரயில் நிலையத்தில் ஒருவன், நாலணா கொடுங்கள் ஐயா! நாலனா கொடுங்கள்' என்றான். ஏன்?' என் றேன். என்ன சொன்னான் தெரியுமா திருடர்கள் 'மணிபர்ஸ் ைவ த் தி ரு ந் தே னு ங் க. எ வ ேன பிக்பாக்கட்காரன் அடிச் சிட்டுப் போயிட்டாங்க! போயிடுச்சிங்க. இப்ப இரயில் சார் ஜவக்குப் பணம் இல்லீங்க. கொஞ்சம் கொடுங்க!” -என்றான் சரிதான்! அவன் குறள் படித்திருக்கிறவன் போல் இருக்கிறது' என்றேன். பிக்பாக்கட்காரன் கூடவா குறள் படிக்கனும் படித்திருப்பான்?' என வியப் போடு கேட்டான். ஆம். அவனுக்குக்கூட அதில் செய்தி இருக்கிறது என்றேன்.

"கொக்கொக்க கூம்பும் பருவத்து கொக்கு எப்படி இருக்கிறதோ அம்மாதிரி காலம், நேரம், இடம், வாய்ப்பு