பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வள்ளுவரும் குறளும்

என்ன அழகாய் அவர் கண்டு பிடித்து உவமை சொல்லி யிருக்கிறார் பாருங்கள். எதை எடுத்தாலும் இப்படித் தான்.

விருந்தினரைப்பற்றி வள்ளுவர் சொல்லுகிறார் ஐந் தாம் ஜார்ஜ் அரசருக்குப் பட்டம் கட்டும்பொழுது, தமிழ் நாட்டிலே ஒரு மரம் வைத்திருந்தார் விருந்து கள். வெய்யில் அடிக்கிறவரைக்கும் தழைகளை விரித்துக் கொண்டிருக்கும். மாலை நேரம் ஆனால் இலைகள் ஒட்டிக் கொள்ளும் மாம் அது. இருளுக்குச் சிணுங்கும் மரம் அது. மரம் என்ன? செடி ஒன்றிருக்கிறது. ஆள் சென்று தொட்டால் சுருங்கிவிடும். விரலை எடுத்தால் விரியும். தொட்டாற் சிணுங்கி செடி அது. பூவில் ஒன்றிருக்கிறது. அப் பூவில் கைபடவேண்டியதில்லை. கிள்ள வேண்டியதில்லை கசக்க வேண்டியதில்லை. அருகில் போய் மோந்தால் குழைந்து விடும் அது அனிச்சப் பூ. அனிச்சம் அது. மோந்தாலே அந்தப் பூ குழைந்து கசங்கித் தண்ணிராய்ப் போய்விடும். விருந்தாளிகளுடைய முகம் இருக்கிறதே அது இதைவிட அனிச்சமென்கிறார் அவர். வெயில் போனால் காய்ந்து போய் ஒட்டுகிற இலையைவிட, தொட் டால் சிணுங்கு கிற செடியைவிட, மோந்தால் குழையும் பூவைவிட, விருந்தாளி வந்தவுடனே அவனை, வெயிலில் போட வேண்டியதில்லையாம், தொடவேண்டியதில்லையாம், முகக்கவேண்டியதில்லையாம், 'பாவிப்பயல் வந்து சேர்ந் தாண்டா சோத்துக்கு இந்த நேரத்திலே’ என்று மனதில் நினைத்தாலே, விருந்தாளியின் முகம் குழைந்துவிடுமாம். "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து' எப்படி? இக் குறள் பாருங்கள்! அனிச்சப் பூ மோந்தால் தான் குழையுமாம்; விருந்தாளியின் முகம், வேறுபட்ட முகத்தை அப்படிக் காட்டினாலே குழைந்து போய்விடு