பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l

5

வள்ளுவரும் குறளும்

மாம், "சரிங்க, நான் வருகிறேனுங்க' என்று பெட்டியை எடுத்துக்கொண்டு போய்விடுவானாம். 'ஏன் சாப்பிட்டு விட்டுப் போகலாமே?” என்பார்களாம்- இல்லை இல்லை, எனக்குப் பசியே இல்லை' என்று போய்விடு வானாம். எப்படி விருந்து?

இன்னும் ஒன்று பெரிய கேள்வி, விறைப்பா யிருக்கிறது நல்லதா? பணிவாயிருக்கிறது நல்லதா? ஆராய்ந்து பாருங்கள். நான் மிகவும் பணிவு பணிவாயிருக்கிறது. ந ல் ல து என்று யாருக்கு? படித்தவன். அப்படி இ ரு க் க ா ேத என்று கூ று கி ன் றார் வள்ளுவர். விறைக்கலாமா? என்றால் அப்படியும் இருக்காதே என் கிறார் பணிவாயிருக்கிறது எல்லோருக்கும் நல்லது என்று பல புலவர்கள் சொன்னார்கள். எவனுக்கும் தலை வணங்கா திருப்பதுதான் சிறப்பு என்று சில புலவர்கள் சொன்னார்கள். வள்ளுவரைப் போய்க் கேட்டால். நீ யார்? துப்புடையவனா? அற்றவனா?' என்று கேட்கிறார். 'துப்பு துப்பு' என்றால் பணம் படைத்தவன் துப் புடையவன்; புலமையுடையவன் துப்புடையவன்; பத்து ஆளுடையவன் துப்புடையவன்; பலம் உடையவன் துப்புடையவன்; ஆடு, மாடு, நிலம், நீர், நெல் முதலிய வைகளை வைத்திருக்கிறவன் துப்புடையவன். இவைகளில் ஒன்று மில்லாதவனைத்தான் 'துப்பற்ற பயல்’’ என்று குறிப்பிடுவதுண்டு. நீ துப்புடையவனா? அற்றவனா? என்கிறார்-நான் துப்புடையவன் என்றால் பணிகிறது நல்லது என்கிறார். எனக்கு ஒன்றும் இல்லை ஏழை என்றால், விறைப்பாயிருக்கிறது நல்லது என்று கூறு கிறார். கேள்வி கேட்டுக் கொண்டு பதில். இத்தகைய உயர்ந்த எழில் மிகுந்த கருத்தை எவர் சொல்வார்? கடுமை யாகவா இருக்கிறது குறளைப் பாருங்கள்.

'பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு'