பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளுவரும் குறளும்

மனைவியிடத்திலே க ன வ ன் கொண்டிருக்கின்ற அன்புக்கு ஒரு சொற்றொடர் காட்டுகிறார். என்ன பொருள் பாருங்கள். உலகமெல்லாம் மனைவிக்கு பார்த்துத்தான் ம ைன வி க் கு இடம் இடம் தேடுகிறான் ஒரு கணவன். உள்ளம் நெஞ்சம் எல்லாம் பார்த்து, கண்ணைத் தேடி எடுத்து, கண்ணிலே வெள்ளை விழியை நீக்கிக் கறுப்பு விழியை எடுத்து, கறுப்பு விழியிலே உள்ள ஒரு புள்ளியிலே ஒரு பாவை ஒடுகிறது. பாருங்கள் அதைப் பார்த்து,

"கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற் கில்லை இடம்' 'என் மனைவியை வைப்பதற்கு வேறு இடமில்லை நீ போய்விடு! அவளை வைக்கவேண்டும் அந்தவிடத்தில்’’ என்று கூறுகின்றான். என்னே தமிழனுடையு பண்பு! என்னே தமிழ் கூறும் மேலான காதல்! பாருங்கள். கண்ணிற் கருமணியுட் பாவாய் நீ போய்விடு, இதைவிட என் திருதுகற்கு வேறு இடம் இல்லை. எவ்வளவு பெரிய பண்பு! வள்ளுவர் தம் குறட்பாக்களில் எப்படிக் காட்டி யிருக்கின்றார்? என்பதைப் பாருங்கள்.

நான் இப்பொழுது காதல் எது? என்பதை விளக்கச் சிலவற்றைக் கூறினேன்-கம்பர் கண்ட பெண், வள்ளுவர் கண்ட பெண் என்று, நான் கண்ட பஞ்சம் பெண்ணைப்பற்றியும் சொன்னால்தான் . இந்தக் கதை முடியும் (சிரிப்பு). நமது தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஆர் கே. சண்முகம்போல. உள்ளவர்களெல்லாம். தமிழ் நாட்டுக்கு இப்போது ஒர் ஆபத்து வந்திருக்கிறதென்று எண்ணி விரைவாக வேலை செய்யவேண்டுமென்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் 56 துறைகள் உள் ளன. அந்த 56 துறைகளும் பாழாய்க் கிடக்கின்றன. கலவித் துறை, கைத்தொழில் துறை,