பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 69

பதிவுக் கணக்கில்கூட அப்படியே! அவ்வளவு தமிழ் உணர்ச்சி இப்போது பெண்களுக்கு வந்திருக்கின்றது. ஆனால், பாவம், எல்லாம் தட்டைக் குச்சிகளாய், எலிக் குஞ்சுகளாய் உடல் மெலிந்து போயிருக்கின்றன.

தமிழ் நாட்டுத் தலைவர்களே? உடனடியாக ஒரு குழு நியமித்து நன்கு ஆய்தல் வேண்டும். இந்த இளம்

பெண்கள் இவ்வளவு உ ட ல் ந ல ம் உடல்நலம் குன்றுவது ஏன்? படிப்பினாலேயே குறைவது? ஏன்? குன்றுகிறதா? சமுதாயத்தினாலேயே?

அல்லது இந்தப் பவுடர் முதலிய மேல் நாட்டுப் பூச்சுகள் காரணமா? மஞ்சள் பூசாத காரணமா? சோப்பு நாகரிகமா? உடல் உழைப்பு இல்லாமையா? படிக்கின்ற ஆண் பிள்ளைகளைப்போல வெளியில் சென்று உலவி நல்ல காற்றில் தோய்ந்து கதிரவன் ஒளிக்கதிர் களில் மூழ்காததினாலா? சாணியைத் தொட்டு, பிசைந்து, கரைத்து, காலையிலே போடாமலிருக்கிற காரணமா? படுக்கை விட்டெழுந்தவுடன் பல் துலக்காமல்கூட காப்பி குடிக்கின்ற காரணமா? உணவு மாற்றமா? படிப்புத் தான் உடம்பை உருக்குகிறதா? கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. விரைவினில் ஒரு குழு நியமித்து எத்தனை நூறாயிரம் ரூபாய்களையாவது செய்து, இதை ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து அந்த வடிகாலை அடைக்காவிட்டால், இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குள் வீரர்களைப் பெற்றெடுக்கின்ற, தாய்மார்களே, மறக்குடி மங்கையரே இல்லாது அழிந்து, போய் விடுவார்களென்று நான் அஞ்சுகிறேன். அவ்வளவு பெரிய ஆபத்து இன்று தமிழகத்தைச் சூழ்ந்திருக், கின்றது. - - -

வெளியில் உள்ள தாய்மார்கள் என்ன? கல்லூரிகள். என்ன? எங்கள் குடும்பத்திலிருந்து பார்த்துச் சொல்லு,