பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 73

போது?’ என்று கேட்டார். பிறர் மனைவியை நோக்காத, பேராண்மை!' ஆண்மை, பேராண்மை! போர்க்களத்தி

லிருந்து வருவதைவிடப் பெரிய ஆண்மையாம்-எது?

பிறர்மனை நோக்காத பேராண்மை ஆணுக்குக் கற்பைச் சொல்ல வந்த வள்ளுவர் பெண்மை உவமை காட்டுவது

வியக்கக்கூடிய ஒன்று. 'ஒருமை மகளிரே போல.'

எப்படி ஒரு கற்புடைய பெண் தன்னைக் காத்துக்

கொள்ளுகிறாளோ, அதைப்போல நீயும் உன்னையே

காத்துக் கொண்டாலன்றி, உனக்கு ஏது பெருமை? என்று

கேட்கிறார்.

'ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு."

ஒன்று ஏழைக் குடிசை வீடு ஒன்று அடுக்குமாடி வீடு. இந்த இரண்டு வீடுகளில் ஏழைக் குடிசை வீட்டான் வள்ளுவரைப் பார்த்து, 'ஐயா வாங்க எங்கள் வீட்டிற்கு வாங்க!' என்று கூப்பிட்டான் சென்றார். ஒன்றுமில்லை. அங்கே ஒட்டைக் குடிசை. மழை உள்ளதும் பெய்தால் ஒழுகும். சாப்பாட்டிற்கு இல்லதும் ஒன்றுமில்லை. ஒ ட் ைட க் சட்டி" கிழிந்த பாய், .ே வ று ஒன்றுமில்லை என்றான். ஆனால் கற்புடைய மனைவியைப் பெற்றிருந் தான். வள்ளுவர் அவனைத் தட்டிக் கொடுத்து, டேய்! உனக்கு என்னடா இல்லை?" என்று கேட்டார். அவ்வளவு தான் அவர் கேட்டது. கற்புள்ள மனைவி இருந்தாளாம். அதனாலே உனக்கு என்னடா இல்லை- எல்லாம் இருக் கிறது அவர் கேட்ட கேள்வி இதுதான்: "இல்லதென்?' ஒரே கேள்வி. பிறகு பக்கத்து மாடி வீட்டுக்காரன் வள்ளு வரைக் கூப்பிட்டான். எங்கள் வீட்டைப் பாருங்கள் என்று எல்லாம் காட்டினான் ஏழு மாடியிருக்கிறது. தந்தக் கட்டிலிருக்கிறது. பட்டுக் கம்பளம் இருக்கிறது. வெள்ளிக் கொப்பரை இருக்கிறது, தங்கத் தாம்பாளம் இருக்கிறது. யானைத் தந்தமிருக்கிறது. வரிசையாகக்