பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 75

எப்படி வரும் போகுமென்று. என்ன தெரியுமா? இந்தக் கொட்டகைக்குக் குப்பல் வரும்போது எப்படி ஒவ்வொரு ஆளாக வந்ததோ, அப்படிப் பணக்காரனுக்குச் செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டேயிருக்குமாம். போகும்போது திடீர் என்று போய்விடுமாம், எல்லாம் ஒரே நேரத்திலே (சிரிப்பு). -

'கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

நாடகக் கொட்டகைக்கு 5 மணிமுதல் ஒவ்வொரு ஆளாக எப்படி வந்துகொண்டேயிருக்கிறார்களோ அப்படியே செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டே யிருக்கும். போகிறது மட்டும் அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போகாது. திடீரென்று கொட்ட கை காலியாய்ப் போகிறது போல ஒரே அடியாய் தொலைந்து போய்விடும் என்பது வள்ளுவர் கண்ட உண்மையாகும்.

கடைசியாக ஒரு குறள். அது மயில் தோகையைக் கொண்டு இரும்புத்துணை முறிப்பது. முறிப்பீர்களா? நீங்கள் முயன்றால் முறிக்க முடியுமா? முடிவில் வள்ளுவர் முறித்துக் காட்டுகிறார்! ஒரு குறள் சாலையிலே போகிறார். வண்டி நிற் கிறது. மயில் தோகைகள் கட்டுக்கட் டாகப் போட்டிருக்கின்றன. வண்டிக்காரர். 200 கட்டு களை வண்டியிலே ஏற்றிவிட்டார். இன்னும் 200 கட்டு கள் இருக்கின்றன. ஒருவன் தலையிலே தூக்கிக்கொண்டு போகிறான். வள்ளுவர்-என்ன அது? என்றார்-மயில் தோகை: வண்டியிலே ஏற்றப் போகிறேன் என்றான். "அப்பா! மயில் தோகையாயிருந்தாலும் அளவுக்கு மீறி வண்டியிலே ஏற்றாதே! ஏற்றினால் அச்சு முறிந்துவிடும்' என்று சொல்விப் போய்விட்டார். எப்படி? வள்ளுவர்! மயில் தோகையைக் கொண்டு வண்டியின் அச்சை முறித்துக் காட்டினாரா? இல்லையா?. -