பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வள்ளுவரும் குறளும்

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்' இந்தக் கருத்து மயில் தோகையையும் வண்டி அச்சை யும் மட்டும் பொறுத்ததாக இல்லை உலகத்தில் உள்ள அத்தனையும் இதில் இருக்கிறது. உணவு உயர்ந்ததாக இருந்தாலும், அளவோடு சாப்பிடு! இல்லையானால் அது உடம்பை முறித்துவிடும் என்கிற கருத்தும் இருக்கிறதா? இல்லையா? அரசாங்கமாயிருந்தாலும் சரி, குடிகளை நடத்துவதற்கு ஒர் அளவு இருக்கவேண்டும். இல்லை யானால், ஜார் ஆட்சியானாலும் முறிந்துவிடும் என்ற, கருத்தும் இருக்கிறதா, இல்லையா? எவ்வளவு பெரிய முதலாளியாயிருந்தாலும் தொழிலாளிகளை வேலை வாங்குவதற்கு ஒரு அளவு இருக்கவேண்டும். இல்லை யானால் முதலாளித்துவமெல்லாம் முறிந்துவிடும் என்கிற கருத்தும் இருக்கிறதா? இல்லையா? வீடு கட்டினாலும் கூட துரண் தாங்குகிற அளவுதான் மாடியைக் கட்ட வேண்டும். இல்லையானால் தூண் முறிந்து போய்விடும் என்ற கருத்தும் இதில் இருக்கிறதா இல்லையா? என்ன இல்லை? நல்ல கட்டுரைதான் சிறந்த கருத்துள்ளதுதான். எழுதுகிற எழுத்தாளன் நான்கு ஐந்து பக்கங்களுக்குள், எடுத்துக்கொண்ட தலைப்பைவிட்டு விலகாமல் சுருக்க மாக எழுதினால், படிக்கிறவனுக்கு நன்றாயிருக்கும். நீண்டு எழுதிக்கொண்டே போனால், படிக்கிறவ. னுள்ளத்தை அக்கட்டுரை முறித்துவிடும் என்கிற கருத்தும் இதில் இருக்கிறதா, இல்லையா? பாருங்கள்.

நல்ல பேச்சாகவிருந்தாலும் குறித்த காலத்தில் சுருக்கமாகச் சொல்ல வேண்டியதைச் சொல்வி முடிக்க '. வேண்டும். நீண்டுகொண்டே போனால் குறித்த காலம் கேட்கிறவர்கள் உள்ளத்தை அப்பேச்சு \" முறித்துவிடும் என்ற கருத்தும் இதில் இருக்கிறதா, இல்லையா? (சிரிப்பும், கைதட்டலும்), நான் கேட்கிறேன். என்ன இல்லை? ஒவ்வொரு குறளிலும்