பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 77

இவ்வாறு ஒவ்வொரு புதை பொருளைக் காணலாம். நீங்கள் குறளைப் படியுங்கள் இவ்வளவு போதும் குறளைப் பற்றி என்று நினைக்கிறேன்.

குறளைப் படியுங்கள் என்று நான் சொன்னதும் நீங்கள் கேட்டுக்கொண்டு கையைத் தட்டிவிட்டு எழுந் © திருந்து போய் விடுவதனால் என்ன படிக்கும் முறை ப ய் ன்? அவ்வளவுதானா உ ங் க ள் கடமை? அ ப் ப டி யி ரு த் த ல் கூடாது. திருவள்ளுவர் படிப்பகத்தினர் திருக்குறள் வகுப்பு நடத்து கிறார்கள். அதிலே நீங்கள் பங்கு பெற வேண்டும். மற்ற வர்களையும் படிக்க வைக்கவேண்டும் எதற்காக? புலவராக அல்ல. மக்கள் மக்களாக வாழ்வதற்கு அது துணை செய்யும். ஏனென்றால் குறள், ஒரு வாழ்வு நூல். குறளைப் படிக்க நான் ஒரு சர்வி கொடுத்துவிட்டுப் போகிறேன். திருக்குறளைப் படிப்பதற்கு ஒரு குறுக்கு வழி. குறளில் 133 தலைப்புகள்; அதைப் பாடம் பண்ணிக் கொள்ளுங்கள். 13 நாள் போதும்; நாள் 1-க்கு 10 ஆக அதைப் பாடம் பண்ணுதற்கு, 13 நாளும் 24 மணிநேர மல்ல, நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் போதுமானது. இன்றைக்கு ஒரு திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். குறளைப் படிப்பதற்கு நாள் 1-க்கு 10 நிமிடமென்று. 13 நாட்களில் திருக்குறள் உங்களுக்கு பூராவும் பாடமாகி விடும். எது? தல்ைப்பு மட்டும், 133 தலைப்புகள். மனைவி, மக்கள், அன்பு, இன்சொல், அறிவு, அமைச்சு, நட்பு. குடி, சூது, பெரியான்ரத் துணைக்கொள் என்றெல் லாமிருக்கும் அறிவைப்பற்றி என்ன சொல்லப் பெற்றிருக் கிறது? என்று பிறகு நீங்கள் அதிலே பார்க்க வேண்டும். அது சொல்லும் அறிவு எது? என்று தலைப்புகளைப் பாடம் பண்ணிக்கொண்டு எதைப் பற்றி அறியவேண் டுமோ அதைத் திருப்புங்கள். பத்து அடி. சாட்டை அடி போல் ஒரே கருத்தைப் பத்துக் குறள்களிலே திருப்பித் திருப்பிக் கூறியிருப்பதைக் காணல்ாம் ஒரு ரூபா விலை யிலே இவ்வளவு கருத்துக்களை நீங்கள் பெறலாம் உலகப் பேராசிரியர்களெல்லாம் இ ன் று ம் கண்டுபிடிக்காத உயர்ந்த கருத்துக்கள் பலவற்றை இரண்டாயிரம் ஆண்டு. களுக்கு முன்ன்ே தமிழ் நாட்டில், திமிழ்ப்_பேரறிஞர்ாகிய வள்ளுவர் அறிந்து சொல்லிவைத்துப் போயிருக்கிறார். அது ஒரு பொதுமறை; பெருஞ்செல்வம்! நாம் அதை படிக்கவில்லையானால், நாம் தமிழரா? நம்முடைய