பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்புரை

வள்ளுவன் வாய்மொழி குறளோடு நிற் கின்றது. அது வாழ்வோடு ஒன்ற வேண்டும் என்பது எங்கள் கருத்து. அறம் வளர, அமைதி நிலவ, இன்பம் பெருக, குறள் நெறி தழைக்க வேண்டும் வள்ளுவர் படிப்பகம் அதற்கென்றே தொண்டு செய்து வருகிறது.

"வள்ளுவரும் குறளும்' என்ற இந்நூல் படிப்பகத்தின் ஆண்டு விழாவில் அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் பேசியது. அது ஒர் சிறந்த நூலாக அமைந்திருக்கிறது. சிறியர், பெரியர், செல்வர், வறியர், ஆண், பெண் ஆகிய அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய செய்திகள் பல இந்நூலில் குவிந்து கிடக்கின்றன.

ஆண்டு விழாவிற்கு வந்திருந்து, விழாவைச் சிறப்பித்து, இப்பேச்சினை ஒலிப்பதிவு செய்து அச்சிட்டு வழங்கிய வள்ளல் தமிழகத்தின் அறி ஞர், உலக விஞ்ஞானி, உயர்திரு. G.D. நாயுடு அவர்களின் அருந்தொண்டிற்கு எங்கள் அன்பு கலந்த நன்றி.

அணிந்துரையும் முன்னுரையும் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு வணக்கம். கோவை } o தங்கள், o 1-11-1953 திருவள்ளுவர் படிப்பகத்தார்