பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வள்ளுவர் இல்லம்

(அயோக்கியத்தனத்தை) திருவள்ளுவரும் உணர்ந்திருப் பாரல்லவா? சிலருடைய நிறை கோல்கள் தூயனவாயிரா. அவர்கள் பிறரிடமிருந்து ஒன்றே கால் தூக்குப் பொருளை ஒரு துக்காக நிறுத்து வாங்கிக் கொள்வர். தாம் பிறருக்கு விற்கும் போது அதே நிறை கோலால் முக்கால் தூக்கை ஒரு தூக்காக நிறுத்துக் காட்டி விற்பார்கள். வாங்கிய விலையைக் கூட்டி விற்பதால் உண்டான ஊதியத்தோடு, அரைத் துக்குப் பொருளும் மறைமுகமாகக் கூடுதலாகக் கிடைக்கின்றதல்லவா? இது இன்றும் நடை பெறுகின்றது. இனியும் - என்றும் - ஏன் மனிதன் உள்ள வரையும் நடக்கும். ஆ! கொடுமை! இதுபோலவே சில அரசியல் அலுவலாளர்கள் உள்ளனர். இவர்களும் வேண்டியவர் என்பதற்காகவும், பணத்திற்காகவும் நெறி தவறி நடப்பார்கள். தூய்மையற்ற துலாக்கோலனிடம் பொருளை விற்றவன் - வாங்கியவன் என்னும் இரு திறத்தாரும் கால் - கால் தூக்கையிழப்பதைப் போல, இவர்களிடமும் மாறுபட்ட இரு திறத்தார் பொருள் கொடுத்து ஏமாந்து போதலும் உண்டு. இந்த முதலைகள் இருபக்கங்களிலும் - இருகைகளாலும் பணம் பெறுவார்கள். முடிவு என்ன? குரங்கு அப்பம் பங்கிட்ட கதைதான் தெரியுமே! உனக்கும் பே! பே! ! உன் அப்பனுக்கும் பே! பே ! என்று கூறி உதறித் தள்ளி விடுவார்கள். இத்தகைய சூழ்நிலை மக்களிடையே கூடாது. ஒழுங்கான நிறை கோல் போன்று ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பது கருத்து.

சிலரைப் பேசும்போது பார்த்தால் சிறந்த நேர்மை யாளர் போல் காட்சியளிக்கின்றனர் அல்லவா? அவ்