பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வள்ளுவர் இல்லம்

அவர்கள் இருளில் மறைந்து விடுவார்கள் என நயம்பட நவின்றுள்ளார் நம் திருவள்ளுவர்.

அடக்கமுடையவனையே எங்கும் - என்றும் - யாரும் கொண்டாடிப் போற்றி உதவியும் புரிவாராகலின் அடக்கம் ஒரு சிறந்த பொருளாகும். ஆதலின் அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அடக்கம் இல்லாதவரின் நிலை தான் தெரியுமே!

கூரிய அறிவுத் திறமையினால் அறியவேண்டு வனவற்றை அறிந்தும் நன்முறை நடக்கையோடு நல்லடக்கம் பூண்டும் ஒழுகுபவரை அவருடைய திறமை யோடு அடக்கத்திற்குள்ள கூட்டுறவை நோக்கி உலகத்தார் பாராட்டுவர்.

‘காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினுஉங் கில்லை உயிர்க்கு” ‘செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்’ நிலை தடுமாறாது அடங்கியொழுகுபவனது தோற்றம் மலையின் தோற்றத்தினும் சிறந்ததாம்.

‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணம் பெரிது.” தனது நிலையிற் கெடாதே அடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது என்பது மணக்குடவர் உரை.

இல்வாழ்க்கையாகிய தன்னெறியின் வேறுபடாது நின்று அடங்கினவனது உயர்ச்சி மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது என்பது பரிமேலழகர் உரை.