பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 125

இக்கருத்தை நாலடியார்,

‘புக்க விடத்துஅச்சம் போதரும் போதுஅச்சம்

துய்க்கும்போது அச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறனில் புகல்.”

எனக் கூறுகிறது. இவ்விதம் எப்போதும் உள்ள அச்சத் தோடு போய்விடாது. என்றாவது ஒரு நாள் உடையவன் அறியத்தான் செய்வான். அன்று தொடங்கி அவனோடும் அவனைச் சேர்ந்தவர்களோடும் இவனுக்குப் பகையும் உண்டாகும். இதனை ஊரார் உலகத்தார் அறிந்து பழிப்பராகலின் மூன்றாவதாகப் பழியும் வந்து சேரும். இதனால் இவனுக்கு இனி என்றும் தீமையே உண்டாகு மாதலின் அத்தீமையின் முட்டை இப்போது ஒன்று சேர்ந்து பாவமாகி விடும். எனவே, இவை நான்கும் இவனை விட்டு நீங்கா.

“எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்

விளியாது கிற்கும் பழி.” “பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.” பிறன்மனை விரும்பாதவனே உண்மையில் அற நெறிப்படி வாழும் குடும்பியாவான். ஒருவன் தன் மனைவி யிருக்கப் பிறன் மனைவியோடு தொடர்பு கொண்டால், தன் மனைவி வாளா (சும்மா) விடுவாளா? கணவன் செய்யும் வேறு எக்குற்றத்தையும் மனைவி மன்னிக்க முடியும். ஆனால் பிற பெண்ணை விரும்புவதை மட்டும்