பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 127

பாம்பையும் கையால் பிடித்து இழுத்து ஆட்டுவான்; பகைவரையும் பறக்கடிப்பான்; பெரிய போர்க்களத்தில் பம்பரம்போல் சுழல்வான் - அத்தகைய ஆண்மை (வீரம்) உடையவன் ஒருவன். ஆனால் அவனே ஒரு கட்டழகியைக் கண்டால் கலங்குகிறான். அவளைப் பின் தொடர்கிறான். அவள் பார்த்தால் போதும் என்று பல்லிளிக்கிறான். பேசினால் போதும் என்று துவள்கிறான். அவள் என்ன சொன்னாலும் சொன்னபடியே கேட்கிறான். இவன் பிறரிடம் காட்டிய சினம், முறைப்பு, பகைமை, அஞ்சாமை எல்லாம் பஞ்சாய்ப் பறக்கின்றன அவனிடம். எதிரியிடம் அகப்பட்டுக் கெஞ்சுகின்ற ஆண்மையற்ற கோழையைப் போலாகின்றான் அவளிடம். அதனால்தான் ஒரு பெண்ணைப் பொருட்படுத்தி அவளுக்கு அடிமையாகாமல்கலங்காமல் நிற்கும் காளைத் தன்மையை வெற்று ஆண்மை என்றுகூடச் சொல்லாமல் பேர் ஆண்மை-பெரிய (வீரம்) ஆண்மை என்றார் நம் வள்ளுவப் பெருந்தகையார்

ஈண்டு ‘பிறன் மனை சேராத பேராண்மை’ என்று சொல்லாமல் ‘பிறன் மனை நோக்காத பேராண்மை’ என்று கூறியிருப்பது இன்னும் குறிப்பிடத்தக்கதாகும். சிலர் பிறன் மனைவியைச் சேர ஆர்வமுள்ளவராயிருந்தும், அதற்குரிய வசதியோ-வாய்ப்போ கிடைக்காததால் சேராமல் இருக்கலாம்; ஆதலின் சேராமை பேராண்மையாகாது; அவளைக் காம எண்ணத்தோடு உற்று நோக்கலும் செய் யாதிருப்பதே பேராண்மையாகும் என்றார் ஆசிரியர். உடலால் சேராதிருப்பதைவிடக் கண்ணால் பார்க்காமலும் இருப்பது சிறந்ததாகலாம். அதைவிட மனத்தால் எண்ணா