பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 129

பிறன்மனை நோக்காமையே பேராண்மை; அ.துடைய வரே சான்றோர்; அஃதுடையவரே அறமுடையோர், அ. துடையவரே ஒழுக்கமுடையோர் என்பது இக்குறளின் தெளி பொருள். இப்பேராண்மையை அறமாகக் குறிப்பிட்டதோடு நிறைவு (திருப்தி) கொள்ளாமல், ஒழுக்கமாகவும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளாரே! இந்த அறத்திற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள வேற்றுமை என்ன? இவ்விரண்டும் எவ்வெவ்வ தனைக் குறிக்கின்றன என்பதனை ஒரு சிறிது ஆராய்வோம்: ஈண்டு அறம் என்றது, இல்லறத்தில் (குடும்பத்தில்) கடைப்பிடிக்க வேண்டிய இல்லற (தருமத்தை) நெறியை. ஒழுக்கம் என்றது பொதுவாக உலகத்தாரிடையே கடைப் பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்கத்தை. பிறன் மனைவியை எவரும் தெரியாமல் கூடியவன், தன் மனைவியையும் அப்பிறனையும் வஞ்சித்து ஏமாற்றிவிட்டான் அல்லவா? தன் மனைவியை வஞ்சித்தல் இல்லற நெறிக்கு மாறு பட்டது. பிறனை வஞ்சித்தல் உலக ஒழுக்கத்திற்கு மாறு பட்டது. எனவே, பிறன்மனை விரும்பியவன் அறமும் ஒழுக்கமும் கெட்டவன் என்பது புலப்படும். புலப்படவே, பிறன்மனை விரும்பாத பேராண்மையுடையவன் அவ் வறமும் ஒழுக்கமும் கெடாதவன் என்பதும் புலப்படுமன்றோ? அதனைத் தான் வள்ளுவர் இக்குறளில் குறிப்பாகவும் சுருக்கமாகவும் கூறியுள்ளார். இந்நுணுக்கமெல்லாம் நுனித்துணர்ந்து மகிழ்தற்குரியனவன்றோ?

பிறன்மனை விரும்பியவர்க்கு அச்சம், பகை, பழி, பாவம், நோய், வறுமை, வயதுக்குறை முதலிய தீமைகள் நேரும் என்பது உறுதியான செய்தி! எனவே, பிறன்மனை