பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வள்ளுவர் இல்லம்

யுடன் திகழவேண்டும் - என்பதற்காகவே “என்றும்’ பொறுக்க என்றார் ஆசிரியர்.

செல்வம் இருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி, வீட்டிற்கு வரும் விருந்தினரைப் போற்றாதவரே ஏழை யருள்ளும் ஏழையராகக் கருதப்படுவர்; அதுபோலவே உடல் வலிமை யிருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி, பிறர் குற்றம் பொறுக்கும் மனப் பொறுமை இல்லாதவரே கோழைகளுள்ளும் கோழையராகக் கருதப்படுவர். அன்றியும் செல்வம் இருப்பினும் இல்லாவிடினும் விருந்தோம்புபவரே செல்வருள்ளும் சிறந்த செல்வராவர்; அது போலவே உடல் வலிமை இருப்பினும் இல்லாவிடினும் மனப் பொறுமையுடையவரே வீரருள்ளும் வீரராகக் கருதப் பெறுவர்.

“இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.’

செல்வம் இருந்தும் விருந்தோம்பா விட்டால், செல்வம் இருப்பதாகப் பொருளில்லை யல்லவா! வறுமையிருந்தும் விருந்தோம்பினால், வறுமையிருப்பதாகப் பொருளில்லை யல்லவா? அதனாலேயே, வறுமையுள் வறுமை விருந் தோம்பாமை என்றார். அதுபோலவே, உடல் வலிமை யிருந்தும் மனப் பொறுமை இல்லாமல் பிறரைத் தாக்கினால், தாம் பிறரை முன்று அடி அடித்தாலும், அவர் தம்மை ஒரடியாயினும் அடிப்பாரன்றோ? உடல் வலிமை இல்லாவிடினும் மனப் பொறுமையிருந்தால் பிறரிடமிருந்து ஒரடியும் பட வேண்டியதில்லையன்றோ? எனவே தீய முறையில் அடியுதைபட்டுத் துன்பத்திற்கும் பழிக்கும்