பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 145

‘அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடு ஈன்பது”.

துன்பம் தருவதில், பகைவரைக் காட்டிலும் பொறா மையே மிக்க வல்லமையுடையதென்பது எங்ஙனம் பொருந்தும்? என்பதைப் பற்றிச் சிறிது நோக்குவோம்:பொறாமையுடையவன் வெளியில் சென்று பகைவரிடம் அகப்பட்டால்தான் - அகப்பட்டபோதுதான், பகைவரால் இவனைத் துன்புறுத்த முடியும்? மேலும், பகைவரால் நெருங்க முடியாத பாதுகாப்புடன் இவன் தன் வீட்டிற்குள் இருக்கும்போதும், பகைவர் இவனைத் தேடி வந்து துன்புறுத்த முடியாது. மற்றும், இவன் வெளியில் செல்லும் போதும், தக்க படை பாதுகாப்புடன் செல்வானேயானால், பகைவரால் இவனைத் துன்புறுத்த முடியாமற்போகும். ஆனால், இவன் வீட்டிற்குள் இருந்தாலும் - வெளியில் இருந்தாலும், விண்ணில் இருந்தாலும் - மண்ணுள் இருந் தாலும், தனித்திருந்தாலும் - படை பாதுகாப்புடன் இருந் தாலும், இவன் தனது பொறாமையால் பிறரது வளர்ச்சியை எண்ணும்போது, மனம் புழுங்கிப் புழுங்கி, வயிறு எரிந்து எரிந்து அமைதி குலைந்து குலைந்து வேதனை உறுவானன்றோ? இவ்விதம் இவனைத் துன்புறுத்தும் வன்மை பொறாமைக்கே உண்டென்பதை யறிந்தே, வள்ளுவர் ‘அது சாலும்’ என்றார். இந்நயங்களை உணர்ந்து மகிழ்க!

ஒருவர் மற்றொருவர்க்கு ஏதேனும் உதவி செய்தால், அதைப் பொறாமையால் தடுக்கலாகாது; அவ்வாறு தடுத்த வரும் அவருடைய குடும்பத்தார்களும் உருப்படமாட்டார்கள்.