பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வள்ளுவர் இல்லம்

‘கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம்

உண்பது உம் இன்றிக் கெடும்.”

‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.’

பொறாமையானது, தன்னை உடையவனுக்கு முன்னோரால் வைக்கப்பட்டுள்ள செல்வத்தை அழிப்பதோடு, அவனையும் கெட்டவழியில் செலுத்தி விடும். பொறாமை உடையவன், ஆக்க வேலையில் கருத்தின்றி, அழிவு வேலையிலேயே முனைந்திருத்தலின் அவனுக்கு முன்புள்ள செல்வமும் போகப், பின்பும் புதுச் செல்வம் தேடமுடியாத சூழ்நிலை உண்டாக, அவன் மேலும் மேலும் தீயவழிகளி லேயே செல்ல நேரிடுகின்றது. ஒரு பொறாமைக்காரன், தன் பொருள் ஒன்று போனால் பக்கத்து வீட்டுக்கார னுடைய பொருள்கள் இரண்டு போகும்படிச் செய்ய வேண்டும் என்று கடவுளிடம் வரம் வாங்கிக் கொண்டு, “தனக்கு ஒரு கண் போகட்டும்” என்று சொல்லிப் பகடைக் கட்டையை உருட்டி, பக்கத்து வீட்டுக்காரனுடைய இரண்டு கண்களையும் கெடுத்ததாகச் சொல்லப்படும் கதையை ஈண்டு நோக்குக. -

‘அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.’

உலகில் பொறாமை உடையவனுக்குக் கேடும், செவ்விய மனமுடையவனுக்கு ஆக்கமும் இருப்பதுதான் முறை. ஆனால் அம்முறைக்கு மாறாக அவ்விய நெஞ்ச முடைய சிலர் ஆக்கமுடையவராகவும் - செவ்விய நெஞ்ச முடைய சிலர் வறுமையுடையவராகவும் இருக்கிறார்களே!