பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வள்ளுவர் இல்லம்

அமைத்துள்ளார். அதாவது, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றாதவர்களை நோக்கி, நீங்கள் புறத்தாற்றில் போஒய்’ கிழிப்பது என்ன? என்று நீட்டி நெளித்து இளித்துக்காட்டி ஏளனம் செய்கிறார். இந்த ‘ஒ’ என்னும் ஒரேழுத்தை இடையில் புகுத்தி அளவை மிகுதியாக எடுத்ததில் இத் துணைப் பொருளழகு பொதிந்து கிடப்பதை நுனித் துணர்ந்து மகிழ்க.

இயல்பான ஒழுக்க முறையுடன் குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்றும் புகழ்ந்து பேசப்படுவான். வேறு நன்மை பெற முயல்பவர்களுக்குள் எல்லாம் அவன் முதன்மையானவன் ஆவான்.

“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை” இக்குறளில் உள்ள இல்வாழ்க்கை வாழ்பவன்’ என்னும் தொடர் ஒர் அரிய அணுத் தொடராகும். இத் தொடரில் இரண்டு முறை வாழ்(தல்) என்னும் சொல் வந்துள்ளது. இதற்கு வள்ளுவர் அகராதியில் என்ன பொருள் கணவனும் மனைவியுமாய் இல்லில் இயைந்து வாழ்தலையே வாழ்தல் என வள்ளுவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இல்வாழ்க்கையே வாழ்க்கையாக அவர்க்குப் புலப்பட்டிருக்கிறது. மற்ற வாழ்க்கை யெல்லாம், வாழாது வாழ்கின்றேன்’ என ஒரு காரணம் பற்றி ஒரிடத்தில் மணிவாசகர் கூறியிருப்பதுபோல், வாழாத வாழ்க்கையே போலும்! வள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் என்னும் பகுதியில், மனைவியை வாழ்க்கைத்துணை’ எனக் கூறு கிறார். அங்ஙனமெனில், வாழ்க்கை என்பது எது? என