பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வள்ளுவர் இல்லம்

ஏகாரமாகக் கொண்டால் இந்தக் குழப்பத்துக்கு இட மில்லை. அஃது என்னும் சுட்டு எவ்வாறு துறவறத்தைக் குறிக்க முடியும் முதலில் இல்வாழ்க்கையைக் கூறிப் பின்பு அது என்று சுட்டிக் காட்டினால் எது என்று எண்ணுக.

இல்வாழ்க்கையில் இருந்து கொண்டுதான் எல்லா அறமும் செய்யமுடியுமாதலின் அறனெனப் பட்டதே இல் வாழ்க்கை என்றார். இல்வாழ்க்கையே அறம் எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால், குடும்பத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்ய லாமா? பிறர் பழிக்காதபடி நடந்து கொண்டால்தானே நல்லதாகும் என்பதை அறிவிக்கவே பிறன் பழிப்ப தில்லாயின் நன்று என்றார் ஆசிரியர்.

அடுத்த குறளில் உலக வழக்கில் உள்ள உண்மை யொன்று பொதிந்து கிடப்பதாகப் புலப்படுகின்றது. உலகில் ஒழுங்கான முறையில் நல்வாழ்வு நடாத்திப் பின்னர் இறந்து போனவரைக் குறித்துச்சுட்டி, “அவர் செத்துத் தெய்வமாய்ப் போய் விட்டார்” என்று மக்கள் பேசிக் கொள்வதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். நாமே பலரைப் பற்றி அவ்வாறு சொல்லியிருப்போம். ஆனால், தீய செயல்கள் செய்து இறந்து போன கொடியவர்களை அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வது வழக்கத்திலில்லை. அவர்கள் அலகையாய் அலைவதாய்ச் சொல்வதுதான் வழக்கம். ஆனால், நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபோன நல்லவரைக் குறிப்பிட்டுத்தான் “சும்மா சொல்லக்கூடாது; அவர் செத்துத் தெய்வமாய்ப் போய்விட்டாரு அவர்