பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 27

பெண் வைத்திருப்பவர்களே! மாப்பிள்ளையின் சொந்த வருமானத்தைக் கருதிப் பெண் கொடுப்பீராக! முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங்களுக்குப் பெண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பது போல் தற் கொண்டான் வளம் எனும் தொடர் அமைந்திருக்கின்ற தல்லவா? பெண் பார்ப்பவர்களே! பணத்துக்காகவும் பளபளப்புக்காகவும் பெண் கட்டாதீர்கள்! பண்புக்காகப் பெண் கட்டுவீர்களாக என்று எச்சரிப்பது போல் ‘மாண் புடையள்’ எனுந் தொடர் அமைந்திருக்கின்றதல்லவா? என்ன அழகு! மனைவியிடம் குடும்பப் பண்புகள்-சிறப்புக் கள் இல்லையாயின், வேறு எது நிறைந்திருப்பினும் வாழ்க்கை சிறவாது.

மனைமாட்சி மனைவிக்கு இருக்கத்தானே வேண்டும். அதனால்தானே அவளுக்கு மனைவி என்னும் பெயரும் கொடுக்கப்பட்டது. மனைக்கு உரியவள் மனைவி. இல்லுக் குரியவள் - வீட்டுக்குரியவள் - இல்லாள். தமிழினம் மனைவிக்குக் கொடுத்திருக்கும் மதிப்புக்கு, மனைவி, இல்லாள் என்னும் சொற்களே சான்று பகருமே! மேலும், ஆடவர் தம் மனைவியரை எங்கள் வீட்டிலே’ என்னுஞ் சொல்லால் குறிப்பிடுவது மரபு!

கணவனோ பட்டம் பல பெற்றவன். பதிவி மேல் பதவி வந்து மோதுகிறது. பணங்காசோ மிகுதிஇன்னும் எல்லாம் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு குறை. அதுதான் மாட்சிமையுடைய மனைவி கிடைக் காத குறை. அது இல்லாமல் வேறு எது இருந்துதான் என்ன பயன்!