பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வள்ளுவர் இல்லம்

யாகாமல், இயற்கையைத் தம் அடிமையாக்கி, எடுத்த காரியத்தை இனிதே முடிப்பர். அதாவது அவர்கள் பெய்’ என்றால் மழையும் பெய்யுமாம்.

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை’ கற்புடைய பெண்ணின் வாய்ச் சொல்லுக்கும் மழைக்கும் மின்சாரத் தொடர்பு இருக்கின்றதா என்ன? இயற்கையின் படிப் பெய்தலும், பெய்யாமையும் செய்கின்ற மழை, ஒரு பெண் சொல்லிவிட்டால் பெய்யுமா? மழை பெய்யாத இடங்களில் பெய்யும் படிப் பெண்கள் ஏவலாமே! ஒருவேளை அங்கே கணவனை மட்டுமே தொழும் கற்புறு மடந்தையர் இல்லைபோலும்! அல்லது, கற்புறு மடந்தையர் ஒரு சிலராவது இருப்பதனால் தான், கொஞ்சம் மழையாவது பெய்து நெஞ்சை நனைக் கின்றதா? அல்லது, வஞ்சகர் நிறைந்த இவ்விடங்கள் வாடட்டும் என்று சிலவிடங்களில் உள்ள கற்புறு மங்கையர் பெய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டுவிட்டார்களா? ஒருவேளை திருவள்ளுவர் வேண்டுமென்றே புனைந் துரைத்துள்ளாரா? அல்லது விஞ்ஞானம் தெரியாதவரா? என்றெல்லாம் பற்பல எண்ணங்கள் பரந்துபட்ட மக்க ளிடத்துத் தோன்றுவது இயற்கை!

விஞ்ஞானிகள் விரும்பினால் செயற்கை முறைகள் சிலவற்றால் பெய்விக்கலாமே தவிர, ஒரு பெண் பெய் என்று சொல்லிய அளவில் மழை பெய்யவே பெய்யாது. இஃது உறுதி! உறுதி! ஆயின் திருவள்ளுவர் இங்ஙனம்