பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளுவர் இல்லம்

ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்” என்றியம்பியுள்ளார் வள்ளுவர். உண்மையில் தெய்வம் இடுப்பு உடையை இறுக்கிக் கட்டாவிட்டால் உடை அவிழ்ந்து விழுந்துவிடுமா? எனவே இன்னோரன்னவை யெல்லாம், எடுத்துக் கொண்ட கருத்தை வற்புறுத்துவதற் காகவும், கற்போர்க்குச் சுவை தருவதற்காகவும் கவிகள் கையாளும் கற்பனை மரபு என்பது காணக் கிடக்கும். அன்றுதொட்டு இன்று மட்டும் எந்தக் கவிதான் கற்பனையைக் கையாளவில்லை! .

மேலும் இக்குறளுக்கு, கணவனை வணங்கும் கற்புடைய பெண், பெய்யென்று சொன்னால் பெய்யக் கூடிய ஒரு மழை இருந்தால் எவ்வளவு நன்மை பயக்குமோ அவ்வளவு நன்மையைக் குடும்பத்திற்குச் செய்வாள் என ஒரு பொருள் கூறுதலும் உண்டு. இங்ஙனம் கூறின், இல்லாத பொருளை எடுத்துக் காட்டும் ‘இல் பொருள் உவமையணி உடையதாக இக்குறளைக் கொள்ள வேண்டும்.

பெண், தன்னையும், கணவனையும், குடும்பப் பெருமை யினையும் காப்பாற்றிச் சோராதிருக்க வேண்டும்.

தூங்குபவனை எழுப்ப முடியும்; விழித்திருப்பவனை எழுப்ப முடியாது; அதுபோல, தன் ஒழுக்கத்தில் தனக்கே கவலையுள்ள பெண்ணையே பிறரால் காக்க முடியும். அல்லாத பெண்ணை அறையில் இட்டுப் பூட்டினாலும் காக்க முடியாது.