பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 53

ஏன்? ஞாயிறு, மனிதர்க்கு ஒருவிதமாகவும், பறவை மிருகங்கட்கு ஒருவிதமாகவும் காய்கின்றதா? இல்லையே! அப்படியிருக்க, வெய்யிலை ஏற்றுப் பொறுக்கும் நிலையில் இவ்வுயிர்கள் ஒன்றற்கு ஒன்று மாறுபடுவது ஏன்?

ஞாயிறு எல்லோர்க்கும் பொதுவாக ஒரே விதமாகத் தான் காய்கின்றது. வன்மையான உடம்புடைய உயிர் களால் வெப்பத்தைப் பொறுக்க முடிகிறது. வன்மையற்ற உடம்புடைய உயிர்களால் பொறுக்க முடியவில்லை. எனவே, உண்மைக் காரணம், ஞாயிற்றின் ஒரவஞ்சனை யன்று, உயிர்களின் உடலமைப்பே என்பது தெளிவா மன்றோ? அதுபோலவே, அன்பு பூண்டு அறம் செய்யும் மனிதர்கள் அனைவராலும் போற்றப்பெற்று வாழ்வார்கள்; வன்பு பூண்டு மறம் செய்யும் மனிதப்பதர்கள் உலகியலால்இயற்கையால் - நீதியால் (அறத்தால்) தண்டிக்கப் படுவார்கள். எனவே, ஒருவர் புகழும் இன்பமும் பெறு வதற்கும் மற்றொருவர் தண்டனை பெறுவதற்கும் உலகி யலின் ஒரவஞ்சனை காரணமன்று; அவர்களின் அன்பு வுடைமையும் அன்பு இன்மையுமேயாம் என்பது புலனாம். ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்’ என்னும் ஆன்றோர் வாக்கியத்தையும் ஈண்டு ஒத்திட்டு நோக்குக!

“என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்’ பாறைபோன்ற கெட்டியான நிலத்தில், பட்டுப் போன மரம் மீண்டும் தழைப்பது என்பது எப்படி முடியாத காரியமோ, அதுபோலவே, அன்பில்லாத மனிதர் உலகில் வாழமுடியும் என்பதும் முடியாத காரியமே! நிலம்