பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வள்ளுவர் இல்லம்

அடுத்து ஆசிரியர் கூறியுள்ள கருத்து மிகவும் சிந்தனைக்குரியது.

‘வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்’ இக்குறளுக்கு முன்று உரைகள் கீழே தரப்படும்.

முதல் உரை வருமாறு:நாம் உண்ணப்போகும் சமயத்தில் ஒரு விருந்தினர் நம் இல்லத்திற்கு வந்துவிட்டால் நாம் அவரை உண்ண அழைக்கின்றோம். அவர் திடீரென வந்தோமே! நமக்காக உணவு தயாரித்திருப்பார்களா! என்று கூச்சப்பட்டுக் கொண்டு உண்ண மறுக்கிறார். அக்குறிப்பை அறிந்து கொண்ட நாம், அவரை நோக்கி ‘உங்களுக்காகவா உலை வைக்கப் போகிறோம்? உங்களுக்காகவா கடைக்குப்போய் அரிசி வாங்கிவரப் போகிறோம்? ஏதோ உங்கள் புண்ணி யத்தால் எல்லாம் உள்ளன. நீங்கள் தயக்கமின்றி உண்ணலாம்’ என்று சொல்லி அவரையும் உண்ணச் செய்கிறோம். அன்று உணவு நிறைய இருந்தால் எல்லோரும் நிரம்ப உண்ணுவதும் உண்டு. போதுமான அளவு இல்லாவிட்டால் வீட்டுக்காரர்கள் சற்றுக் குறைத் துண்ணுவதும் உண்டு.

இன்னும் சில விருந்தினர் ஒரு வேலையினிமித்தம் நம் மனைக்கு வருவதுண்டு. வேலை முடிந்ததும், நமக்குச் செலவுவைக்க விரும்பாத அவ்விருந்தினர் தம்முருக்குப் புறப்படுவார். நாம் அவரை மறித்து, எங்கள் வீட்டில் உண்டு செல்லவேண்டும் என்போம். அவர் மறுப்பார்.