பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளுவர் இல்லம்

செய்வான் - என்ற கருத்து பொதிந்த கண்களுடன் இந்தக் குறளை நோக்குக.

தொம்பையிலிருந்த விதை நெல்லை அல்ல-விதைத்த நெல்லையே நிலத்திலிருந்து எப்படியோ எடுத்துக் கொண்டு வந்து குத்திச் சமைத்து வந்தவர்க்கு இட்ட வள்ளல் இளையான்குடி மாறநாயனாரது வரலாறு தமிழ் மக்கள் அறியாததொன்றன்று. எனவே, முன்னர் விருந்தினரை ஒம்பிப் பின்னர் மிஞ்சியிருந்தால் தான் உண்ணும் உளநிலை பெற்றிருப்பவன், விதையை - விதை நெல்லை நிலத்தில் இடவும் விரும்புவானோ? மாட்டான்; விருந்தினர்க்குச் சமைத்துப் படைக்கவே விரும்புவான் என்பது கருத்து.

இனி மூன்றாவது உரை வருமாறு:

பிறர்க்கு அளிக்காமல் தாங்கள் மட்டும் விலாப் புடைக்க உண்ணும் தன்னலக்காரரின் நிலத்திலும், பிறர்க்கும் அளிக்காமல் தாங்களும் அனுபவிக்காமல் வறட்டு வாழ்க்கை நடத்தும் கருமிகளின் நிலத்திலும், பணச் செலவிட்டும், உடல் முயற்சி செய்தும் நிலத்தில் விதைவிதைத்துப் பயிரிட்ட பின்புதான் விளைதல் வேண்டும் என்பது நீதி. ஆனால், தன் உணவுகளை யெல்லாம் பிறர்க்கேயிட்டு மிகுந்ததை உண்ணும் அறவோனது நிலத்திற்குக் கூடவா பணச் செலவு செய்ய வேண்டும்? உடல் உழைப்பு வேண்டும்? நீர் பாய்ச்ச வேண்டும்? ஏர் உழ வேண்டும் எருவிட வேண்டும்! விதைவிதைக்க வேண்டும் களை பறிக்க வேண்டும்! காவல் காக்க வேண்டும்! இவை நீதியற்ற செயல்