பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இரிையவை கூறல்

இனியவை கூறல்-ஓசையானும் பொருளானும் செவிக்கும் மனத்திற்கும் இனிமை தரக்கூடிய சொற் களைப் பேசுதல். இஃது பொதுவாக எல்லா மக்கட்கும் இன்றியமையாத தாயினும், சிறப்பாக விருந்தோம்பும் இல்லறத்தார்க்குத் தேவையாதலின் விருந்தோம்பலின் பின் நிறுத்தப்பெற்றது போலும்!

குளிர்ந்த அன்பொடு பொருந்தி, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகம் இல்லாததாகி, உண்மையை உணரும் ஆற்றலுடைய அறிவாளிகளின் வாயிலிருந்து வருவதே இன் சொல்லாகும். வஞ்சகம் இல்லாது உண்மையைப் பேசினாலும் வெறுப்பாகக் கசப்பாகப் பேசாமல் குளிர்ந்த அன்புடன் பேசவேண்டும். அன்பாகப் பேசுவதுபோல் நடித்து உள்ளே வஞ்சகம் வைத்துப் பேசலாகாது, என்பவற்றை அறிவிக்கவே “இன்சொலால் ஈரம் அளை இப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்’

என்றார் ஆசிரியர்.

கொடுத்தலினும் இன்சொல் சிறந்தது. எங்ஙனம்? பிறர்க்கு ஒன்று கொடுக்க உண்மையாக மனம் விரும்பி னாலும் அப்பொருள் நம்மிடம் இல்லாமற் போகலாம். இருந்தும், நாம் கொடுக்க விரும்பினாலும், நம்மைச்