பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வள்ளுவர் இல்லம்

‘முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்’

எல்லோரிடத்தும் இன்சொல் பேசுபவர்க்கு வறுமை யிருக்காது. எல்லோரிடத்தும் இன்சொல் பேசி இனிய வராகப் பழகுவதால் யார் அவரை வெறுக்க முடியும்: யார் வேலை தரமுடியாது என்று சொல்ல முடியும்? யார் வேலையைவிட்டு நீக்க முடியும் துன்பம் உண்டாக்கவும் யார்க்கு மனம் வரும் துன்பம் நேர்ந்தபோது பார்த்துக் கொண்டிருக்க யார் துணிவர் அவருடைய வறுமைக்கு யார் இடம் கொடுப்பர்? நான் முந்தி நீ முந்தி’ என்று ஒடி எல்லோரும் அவர்க்கு உதவவே முற்படுவரன்றோ? பின்னர், துன்பம் தரும் வறுமை அவர்க்கேது: ‘வாய் நலம் இருந்தால் ஊர் நலம் இருக்கும்’ என்பது நம் நாட்டுப் பழமொழியன்றோ?

திமிரான நடையும் துடுக்கான செயலும் மிடுக்கான பேச்சும் உடையவர்கள் எவ்வளவு ஆபரணங்களை அணிந்திருந்த போதிலும், நாம் அவரைக் கண்டதும் பகைவர்போல் - கொலைகாரர்போல் அருவருக்கின்றோம். அடக்கமும் நயமும் இன்சொல்லும் உடையவர்கள் ஓர் அணியும் அணிந்திராவிட்டாலும் நம் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து பாராட்டப் பெறுகின்றார்கள். எனவே மனிதனுக்கு அழகளிக்கும் அணி யாது என்பது புலப்படு மன்றோ? மேலும், பொன்னாபரணங்களை ஈட்டல் துன்பம்; காத்தல் துன்பம்; திருடராலோ, ஏழ்மை நெருங்கு வதாலோ இழந்த காலையும் பெருந்துன்பம். மீண்டும் அவற்றைப் பெறல் அரிதாயினும் ஆகும். ஆனால் பணிவு