பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

பொய் சொல்லும் உள்ளத்தில் இருட்டைப் போக்க முடியாது என்கிறார். பொய்யுள்ளம் எப்போதும் இருட்டாகவே இருக்குமாம். உண்மை பேசுவோர் உள்ளமே ஒரு நல்ல விளக்காம். இந்த விளக்கு இருப்பதனால் அவர்கள் உள்ளத்தில் எப்போதும் இருட்டு வருவதில்லையாம்.

இக் கருத்துக்கள் அனைத்தும் அடங்கிய குறள் ஒன்று.

"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு"

என்பது.

என்ன ஆராய்ச்சி! எவ்வளவு பக்குவப்பட்டது வள்ளுவர் உள்ளம் பாருங்கள்! பொய் சொல்லாதவருடைய உள்ளம் வெளிச்சமாக இருக்கின்றதாம். சூரிய வெளிச்சம், சந்திரவெளிச்சம், குத்துவிளக்கு வெளிச்சம், மின்சார விளக்குகளின் வெளிச்சம் ஆகியவைகள் ஊடுருவி ஒளிபெறச் செய்ய முடியாத உள்ளத்தை உண்மை என்னும் விளக்கு ஒன்று சென்று ஒளிபெறச் செய்கிறதாம். என்ன உண்மை! என்ன வெளிச்சமான உள்ளம் சுவையுங்கள்! நன்றாய்ச் சுவையுங்கள். பிறகாவது உண்மை பேச முயலுங்கள்.


சூதுள்ளம்

பொய் பேசாதே என்று சொல்லிக் கொண்டிருந்த வள்ளுவர் அசல் சூதாடியாகிவிடுகிறார். சூதாட்டத்தில் சில உட்பொருள்களைப்பற்றி விவரிக்கிறார். சூதினர் ஒன்றெய்தி நுாறிழப்பர்; அதாவது ஒரு பொருளைப் பெற நூறு பொருள்களை இழந்துவிடுவார்கள் என்று கூறுகிறார். இதிலே சிந்தித்தால் ஒரு பொருள் மட்டுமல்ல வேறு பொருள்களும் விளங்குகின்றன. சூதுற்றவன்