பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வள்ளுவர் கண்ட அரசியல் நிகழாதிருக்கத் துறத்தலே சாலச்சிறந்தது. இப்படித் துறப்பதல்ை இன்பமாகிலும் ஏற்படும். துறவாமல் போயின், யாவரிடத்திலும் இனிது ஒழுகும் இனி மைக்கும் நடுவு நிலமைக்கும் ஊறுபயப்பதாகும். இதுவரை கூறியவற்ருல் வறுமைபோன்ற துன்பம் எதுவும் இல்லை என்பது புலப்பட்டது. இந்த வறுமை மேலும் என்ன கிலேக்கும் கொண்டுபோகும் என்பதை யும் அடுத்துக் காண்டோமாக.