பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. வள்ளுவர் கண்ட அரசியல் பிய பொருள் கிடைத்தபோதோதான் இரத்தல் இன்பம் தரும். அப்படி விரும்பியதை யாசகர் பெற வேண்டுமாயின், ஈபவர்காலம், இடம், குறிப்பு அறிந்து சென்று கேட்கவேண்டும். அவர்கள் தம் வயம் ஆகும் அளவுக்குப் பேசவேண்டும். அவர்கள் மனம் இள கும் அளவுக்கும் உரையாடவேண்டும். இப்படி எல் லாம் அறிந்தும், சொல்லியும் விரும்பியது கிடைக்க வில்லை என்ருல், துன்பம்வரும் என்று கூற வேண்டுமோ? வேண்டா அல்லவா ? செல்வர்களும் வறுமையாளர் தம் இடம்வந்து கேட்டபோது அவர் களுடைய கிலேயை முன்னர் உணர்ந்து கொடுத்தல் கலமாகும். ஈவது கரவேல்' என்பது 5ம் மூதாட்டி யார் மொழியல்லவா ? களனிடம் தேவர்கள் இந்த முறையைக் கூறி அன்ருே கொடைச் சிறப்பை விளக் கினர். குறிப்பறிக் தீதலே கொடைமற் றின்றென மறுத்தலே கேட்டபின் வழங்கல்: ஆதலின் பெறற்கரும் ஆவியும் பெட்பின் ஈகுவன் திறப்பட இவர்உளம் தெரிந்த தில்லையால் என்ற நைடதச்செய்யுளையும் ஈண்டுக் காண்க. தம்மிடம் உள்ள பொருளே மறைக்காமல் ஈயவல் லாரிடத்தில் சென்று இரத்தல், இரப்பவர்கள் தம்மி டம்வந்து ஒரு பொருளைக் கேட்பவர்க்குக் கொடுத் தலைப்போன்ற ஓர் அழகுடையதாகும். குடிப்பிறந்த வரும் யாசகர்களின் இன்மை தீரக்கொடுத்தலும் கடமையாகும். “இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோய்' என்று புறகானு று இப் பண்புடையவள்ளல் ஒரு