பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வள்ளுவர் கண்ட அரசியல் வறுமையாகிய கடலேக் கடப்பதற்கு இரவு என் லும் படகை மேற்கொள்வோம் என்று சிலர் கருதலாம். அந்தோ அது, வறுமைக் கடலேக் கடக்கும் போது, கரத்தல் என்னும் பாறையில் தாக்குண்டு அழிந்து போகும். முயற்சியாகிய படகாயின் வறுமைக் கடலேக் கடக்கலாம். இரவு என்று நினைத்த அளவில் உள்ளம் உருகுகிறது. அப்படியே பொருள் உள்ள வர் கொடுக்க மறைத்தபோது உள்ளமே அன்றி எல் லாமும் கெடும். ஆகவே, இரப்பு மிகமிக இழிவு. இப் படி இழிவு என்று தெரிந்தும் போய் யாசித்தபோது இல்லை போ" என்று பொருள் உள்ளவர் கூறிவிட் டால் மானம் தாங்காது; உயிர் போய்விடும். சொல்லக் கேட்டவர் உயிரே போகுமானல், சொன்னவர் உயிர் மட்டும் இருக்குமோ இராது. இதல்ை யாசித் தலும் திது; பாசிப்பவர்க்கு இல்லை என்று கூறுதல் அதனினும் தியது என்று உணரவேண்டும். இது வரை கூறியவற்ருல் இரவு கூடாது என்பது பெறப்பட்டது. இவ்விரவு கூடாது என்ருல் நாட் டில் 'பொருளா தார கிலே சிறந்து இருக்கவேண்டும். பொருள் பெறுகுதற்கு உரிய வசதிகள் காட்டில் அமைந்திருத்தல் வேண்டும். அவ்வழியினக் குடிமக் களே செய்துகொள்ள வேண்டும். காட்டில் தொழில் முறை இங்கவேண்டும். அத்தொழில் முறை பல வாயினும் உழவுத் தொழிலாகிலும், ஒழுங்குற நடை பெறவேண்டும். உழவுத் தொழிலே சாலச் சிறந்த தொழிலாகும். அத்தொழிலின் சிறப்பு என்ன? அத் தொழிலே நாட்டு மக்கள் எப்படி நடத்தி நாட்டின் பொருளாதார நிலையைப் பெருக்க வேண்டும் என் பனவற்றை இனிப்பார்ப்போமாக.