பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. உழவு. 'உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ " என்பது நம்நாட்டு முதுமொழி. உழைப்பில்ை பொருளாதார நெருக்கடி, பசியின்மை முதலிய வற்றைப் போக்கலாம் என்பதே இப்பழமொழியின் கருத்து. இந்த அடிப்படையான காரணம் தொன்று தொட்டே காட்டில் நிலைத்த ஒன்று என்பதை அறிந்தே வள்ளுவரும், தாம் கூறப்போவது தானிய விக்ள பொருள் தொழிலப் பற்றியதாக இருந்தும், வேளாண்மை என்பதற்கும் உழைப்பு என்பதற்கும் பொதுவாக இருக்கவேண்டியே உழவு, என்றே தலைப் புக் கொடுத்துப் பேசினர். எல்லாவற்றிற்கும் உணவே இன்றியமையாதது. அவ்வுணவிற்குக் காரணம் உழவு. இந்த உழவு காட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இன்றியமையாத தொழிலாகும். இவ்வுழவுத்தொழில் சிறுபான்மை வணிகர்க்கும், பெரும் பான்மை வேளாளர்க்கும் உரித்தாகிய தொழிலாகும். இவர் களும் பணியாளர்களே வைத்து உழுது பயன் பெறு வாராயின், அவர்களை உழுவித்துண்ணும் வேளாளர் என்றும், தாமே பயிரிட்டு அதன்பயன் அனுபவித்து வரின், அவர்களே உழுதுண்னும் வேளாளர்கள் என்றும் கம் முன்னேர் கூறிவந்தனர். ஆனல், இப்படிப் பாகுபடுத்த வேண்டுவதில்லை. இது எல்லோர்க்கும் உரியது. இது குடியுயர்தற்கும் காரணமானது. குடியினை உயர்த்த விரும்பும் நல்ல மக்களுக்கு உழவு, தொழில், வரைவு, வாணிகம்