பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வள்ளுவர் கண்ட அரசியல் சிற்பம், வித்தை என்ற ஆறும் வேண்டியிருக்கின்றன. இவை முயற்சியிலுைம், அறிவிலுைம் பெறக் கூடிய யவை. இவற்றுள் உழவின் மூலம் தானியங்களே உண்டுபண்ணிக் குடி உயர்த்தல் கடமையாகும். அறிவில்ை பெறக்கூடிய அனைத்தினும் இதுவே சிறந்ததாக அறிஞரால் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், உலகமானது உழவுத்தொழிலை விடுத்து வேறு எந்தத் தொழிலைச்செய்து திரிந்தாலும் முடிவில் ஏர் பிடிப்பவன் பின் சென்றே உணவுக்காக நிற்க வேண்டியிருக்கிறது. ஆகவே, உழவே தலே சிறந்த தொழில் என்பது பெறப்படுகிறது அல்லவா ? 'தொழுதுரண் சுவையினும் உழுதுண் இனிது ' என் னும் கொன்றை வேந்தன் அடியினையும் காண்க. உழவு செய்து அதனுல் கிடைத்த பொருளைத் தருமத் திற்குக் கொடுத்தல் இ றப்புடைய புண்ணியமாகும். உண்ணவேண்டி, கடல் ஓடியும், மலே ஏறியும், காடு சேர்ந்தும், நாடு கடந்தும் ஒடித்திரிந்தும் பொருளேத் தேடிலுைம், உணவுப் பண்டத்திற்கு உழவைத் தான்ே தேடவேண்டும்? ஆதலால், உழவே தலே சிறத்ததொழில். உழுபவர் உபகாரிகள் என்ற பெய ருக்கும் உரியம் ஆவர்.” உழுவித் திருவர் இருவர்.உழு வித்து முழுதும் உணலாகும் உழுதுண் பவரே தமக்குரியர் உபகா ரிளன் பார்.அவரே. என்ற வினயக புராணப் பாடலக் காண்க அலகிலா மறைவிளங்கும் அந்தணர்ஆ குதிவிளங்கும் பலகலையாம் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும் மலர்குலாம் திருவிளங்கும் மழைவிளங்கும் மறுவிளங்கும் உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே.