பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழிவு 105 என்ற ஏர் எழுபது பாடலேயும் பார்த்து உழவின் சிறப்பை உணர்வோமாக, உலகமாகிய தேர்க்கு அச்சானியாக இருப்பவர் களும் உழவர்களே. உழவர்கள் உழுதொழிலைச் செய்யாது பிறதொழிலச் செய்பவரையும் தாங்கி நிற்கின்றனர். இதல்ை உலகம் இடையருது நடக் கிறது. ஆகவே, அவர்கள் உலகமாகிய தேர்க்கு அச்சாணி ஆயினர். உழுதொழிலச் செய்யாதவர் பிறருடைய பெருமிதத்தினுல் எது செய்யினும், அதனேப் பொறுத்து அவர்களேத் தொழுது வயறு வளர்த்துக் காலங் கழிப்பர். உழவர்கள் பிறரைத் தொழுதல் செய்யாது தம்மையும் அரசரையும் பெரியராக்கி உலகத்தையும் தாங்குவர். தொழுதுண் பவரே பிறர்க்குரியார் தொழில்முற் று.ழக்தும் உழவினர்.பால் முழுதும் அடுப்ப வேண்டுதலின், முதன்மைத் துழவென் றறிமைக்தா என்று வினயக புராணமும் உழவுத் தொழில் முதன்மையானது என்று காட்டுகிறது. ஆகவே, உழுது அதனுல் வரும் பயனே உண்டு வாழ்பவரே கல்வாழ்வு வாழ்பவர் ஆவர். மற்றவர்கள் பிறரைத் தொழுது அதல்ை வரும் பொருளைக் கொண்டு வாழ்பர் ஆவர். செல்லமும் உழவினல் வருமெனில், அதுவே சிறந்ததாகும். இதல்ை ஏற்றவர்க்கும் இட்டு வழங்கி வாழ லாம். அரசர்க்கும் உழவர் உணவுப் பொருள்களைத் தர வேண்டி இருக்கிற தல்லவா? ஆகவே, அரசர் வாழ்வும் உழவர் வாழ்வுபோன்ற பெருமை உடையது