பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வள்ளுவர் கண்ட அரசியல் அன்று. இதனுல் அல்லவா கெற்பயிர் வினே' உழு துண்டு வாழ்வதற்கு ஒப்பில்லே கண்டீர் பழுதுண்டு வேருேர் பணிக்கு' என்னும் வாக்குகள் எழுந்தன: உழுததல்ை கிடைத்த தானியங்களை உடையவ ராகிய கருணை நிரம்பிய உழவர்கள், பல அரசர்களின் கீழ்வாழும் மக்களையும் நாட்டையும் தம் அரசர் கீழ் வந்து வாழுமாறும் சேருமாறும் காண்பர். அரசனது வெற்றி உழவர்களின் உழப்பின் காரணத்தால் என் பதை எல்லோரும் அறிந்திருந்தனர். இதனைப் புற நானூறு ஊன்று சால்மருங்கின் ஈன்றதன் பயனே' என்று நன்கு எடுத்து இயம்புகிறது. இத்துடன. உழ வின் சிறப்பு நின்றது? சிலப்பதிகாரம் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளேப் போர்' என்றும் இயம்புகிறது. இதல்ை உழவர்கள் தாம் வாழ்வதோடு அரசரையும் பிறரையும் வாழ் விப்பர் என்பது பெறப்படுகிறதல்லவா ? இதல்ை தான் சிரைத்தேடின் ஏரைத்தேடு ' என்றும், மேழிச் செல்வம் கோழை படாது' என்றும் கொன்றைவேந்தன் கூறுகிறது. உழவர்கள் தம் கையால் உழுது உண்டலே இயல்பாக உடையர். இவ் உழவர்கட்கு இருக்கும் சிறப்புக்கள் பலவற்றுள், தாம் பிறரிடம் சென்று எது ஒன்றையும் கேளாத இயல் பும், தம்மிடம் வந்து கேட்பவர்க்கு இல்லை என்று கூருது ஈயும் இயல்பும் ஆகிய இவ்விரண்டு சிறப்புக் களும் உண்டு. இதல்ை உழவர்கள் எக்காலத்தும் அழிவில்லாத செல்வம் உடையவர் என்பது தெரிகிற தல்லவா ? இவர்களே இல்லற நடத்தவல்ல இயல் பினர் என்பதும் அறியவருகின்றதன்ருே ?