பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவு 107 இங்ங்னம் உழுதொழிலால் வேளாண்மைக் குணம், உரமேறி இருந்த காரணத்தால் அல்லவா, இளேயான் குடிமாற நாயனர் தம் இல்லத்திற்கு வந்த அதிதிக்குத் தாம் வறுமையுற்றிருந்த காலத்திலும், உணவு அளித்து உபசரித்தார் இதனே, இன்னலொற்கத் தும்.உறவை ஏற்றலினி சற்கமுது முன்னமைத்தார் மாறர் முருகேசா ” என்று முருகேசர் வெண்பா மொழிகிறது. ஆ காட்டில் வாழும் உழவர்களுக்கு இருக்கும் பெருமையே பெருமை ! உழவர்கள் உழுதொழிலைச் செய்யமாட்டாமல் கைகட்டி இருந்துவிடுவாராணுல், எல்லாவற்றையும் விட்டோம் என்னும் தவசிகளும் தம்தவ ஒழுக்கத்தைச் சரிவர நடத்தி கன்னிலே எய்த மாட்டார். இதன் கருத்து உலகத்தில் இம்மை, மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா. ஆகவே, துறவறம் இனிது நடக்கவும் இல்லறம், இனிது கடக்கவும் உழவே காரணமாகும். வேள்வித் தொழிற்கும் உழுதொழில்முன் வேண்டுமால் சூழிசூழ் தென்குளத்துார்ச் சோமேச ' என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா கூறுவதை யும் காண்க. துவரை உழவரது பெருமை உரைக்கப்பட்டது அவ்வுழவர் எப்படி உழைத்தால் நிலம் நல்ல பலனைத் தரும் என்பதையும் அறிதல்வேண்டும். நிலம் நல்ல பய னைத் தரவேண்டுமானல் நிலத்தை உழுபவன் ஒருபலம் புழுதி கால் பலம் எடைக்குவரும் அளவுக்கு கிலத்தை காயவிட வேண்டும். அப்படிக் காயவிட்ட நிலத்தில்