பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழி;ை 109 மேலே கூறிய ஐந்து தொழில்களில் மட்டும் கவனத்தைச் செலுத்திப் பயன் இல்லை. அடிக்கடி நிலத்தைக் கவனித்துக் கொண்டே வரவேண்டும். " உடையவன் கண் ஓடாப் பயிர் அழியும் அல்லவா." அப்படிச் செய்யவில்லையானல், தன்னைக் கவனியா திருக்கும் கணவன்மீது பிணக்கம் கொண்டு ஊடும் மனைவிபோல நிலமும் உழவனே வெறுத்துவிடும். அதாவது பயனத்தராது போகும். ஆகவே, அடிக்கடி அவனது பார்வை இருந்து வரவேண்டும். பிறரை அனுப்பிப் பார்வையிட்டு வருமாறு செய்தல் கூடாது. "பூமி விரும்பு” என்னும் ஆத்திசூடி தெடரைப் i_3 is ssdl, 35. ' மையார்த்த புன்பயிர்க்கும் வான்பயிர்க்கும் போய்ப் செய்பார்க்க வேண்டும். ' (பல்கால் என்பது தினகர் வெண்பா. ஆகவே, நாட்டுமக்கள் உழவை மேற்கொண்டு நன்கு நடத்தவேண்டும். பொருள் இல்லை பொருள் இல்லை" என்று சோம்பி இருத்தல் கூடாது. இப்படிக் கூறுபவரைப் பார்த்து நிலம் என்னும் மாது எள்ளி நகைப்பாள். ஏ அறிவிலியே, என்னைத் திருத்தி ஏன் உணவையும் பொருளையும் தேடிக்கொள்ளக் கூடாது' என்பாள். இப்படியெல்லாம் உழவின் சிறப் பினே எடுத்து இயம்பியதல்ை ஒரு நாட்டில் நல்ல நிலபலமும் உழவர்களும் பொருந்திப் பொருள்வளம் பெருக்க வேண்டும் என்பதை அறிந்தோம். அப் படிப் பெற்ற பொருளின எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்பதையும் இனிப்பார்ப்போமாக