பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருந்து 127 மருத்துவனவான் நோயாளியின் பருவம், வேதனை, வலியாகிய இவற்றின் அளவையும், சாத்தியம், அசாத்தியம் யாப்பியம் என்னும் சாதி வேறு பாட்டையும், தொடக்கம், நடு, முடிவு என்னும் நோயின் வேறுபாட்டையும், வன்மை, மென்மை முத லியவற்றையும், மருத்துவ நூல் நெறியால் அறிந்து அவற்ருேடு பொருந்தச் சிகிச்சைசெய்ய வேண்டும். பெரும்பொழுது, சிறுபொழுதுகளை, அறிந்து இப்பொ ழுதிற்கு இந்த மருந்தைத்தான் கொடுக்கவேண்டும் என்பதையும் உணர்ந்து மருந்து கொடுக்கவேண்டும். நோயைத் தீர்ப்பவனும், மருந்தைச் செய்பவ னும், மருந்தும், காட்டில் இருத்தல் வேண்டும். இம் மூன்று துணைகளும் இருந்தால்தான் நோய் உற்ற வன் நோய் நீங்கப் பெறுவான். நோய் உற்றவனும், பொருளுடையவனாய், மருத்துவன் சொற்படி நடப்ப வய்ை, நோய் இன்னது என்பதை அறிவிப்பவனுய், மருந்துத் துன்பம் பொறுத்துக் கொள்பவய்ை இருத் தல் வேண்டும். மருத்துவனும் நோய்கண்டு இது நம்மால் தீர்க்க இயலாது என்று அஞ்சம் அச்சம் அற்றவய்ை, ஆசிரியனே வழிபட்டு அவன் சொல்லிய முறைகளைப் பின்பற்றி மருந்து ஈயும் நுண்ணறிவு உடையவனாய்ப் பலமுறை பலநோய்களைத் தீர்த்த அனுபவமுடையவனுய், மனம் மொழி மெய்கள் தூய் மையுடையவனாய் இருத்தல் வேண்டும். ஒரே மருந்தா யினும் பலநோயையும் தீர்க்கும் தன்மையும், சுவை, வீரியம் விளைவு, ஆற்றலால், மேம்பட்டதன்மை யும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், பகுதியோடு பொருந்தவல்லதாகவும் அஃது இருத்தல் வேண்டும். மருந்து செய்பவனும், நோயாளியிடம் அன்பு உடைய