பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 வள்ளுவர் கண்ட அரசியல் பல்குறி தானும் இன்றிப் பொறையொருங் குறுகால் தாங்கி நல்கிறை வேந்தர்க் குய்க்கும் நலத்தது தொண்டை நாடு என்னும் பாடலால் நன்கு அறியலாம். நல்ல விளைவு காரணமாக காட்டில் உணவுப் பொருள்கள் மலிந்து காணப்படும் ஆதலின், பசி காட் டில் இருத்தற்கு இடம் இல்லே. பசிமட்டும் இல்லா மல் இருப்பது நாட்டுக்குச் சிறப்பில்லே. காட்டில் திய காற்ருலும், மிகுந்த குளிரும், வெப்பத்தின் மிகுதியா லும், நாட்டில் கிடைக்கும் பொருள்களைப் பெரிதும் உன்னும் காலத்து ஏற்படக்கூடிய தீங்கிலுைம் நோய் தோன்றுதற்குக் காரணம் உண்டு. ஆதலின், இம்முறையில் ஏற்படக்கூடிய நோய் இல்லாது நாடு திகழ்தல் வேண்டும். வேற்றரசர்கள் படை எடுத்து காட்டை அழிக்காமல் இருக்க, நிலப்படை, காட் டரண், நீர் அரண், கில அரண், மலேயரண் முதலிய வற்றைப் பெற்றுப் பகைவரால் அழிவுருதிருக்கும் நிலையில் நாடு அமைந்திருத்தல் சிறப்பாகும். இளங்கோ அடிகளாரும் தமது சிலப்பதிகாரத் தில் நாட்டின் இயல்பைக் கூறுகையில், பசியும் பிணி யும் பகையும் நீங்கி" என்று கூறிச் சென்ருர் காட்டு மக்களுக்கு இம்மூன்றும் இல்லாதிருக்கவேண்டும் என் பதை அடிக்கடி கினேவு ஊட்டும் பொருட்டுப் பறை யறைந்து அறிவித்து வந்ததாகச் சிந்தாமணி ஆசிரியர், ஒன்றுடைப் பதினே யாண்டைக் குறுகடன் இறைவன் விட்டான் இன்றுளிர் உலகத் தென்றும் உடலுளிர் ஆகி வாழ்மின்