பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 காடு பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையும் என்ன மன்றல் மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்த தன்றே என்று கூறியிருப்பதல்ை அறியலாம். நாடு என்பது பரந்த பரப்புடைய கிலப்பகுதி. இதில் எவர்க்கும் இடம் உண்டு. இப்படி இடம் பெறு பவர் பலர் ஆவார். சாதிபற்றியும், கடவுள்பற்றியும் தம் கருத்து வேற்றுமை கொண்டு மாறுபட்டுக் கூடும் கூட்டத்தவர்களும், வழிபறி கொள்ளக்காரர்களும், உள் காட்டில் இருந்துகொண்டே திருடுபவர்களும், கோள் சொல்லித் திரிபவர்களும், இச்சகம் பேசிப் பொருள் பறிப்பவர்களும், பொய்சாட்சி கூறுபவர்க ளும், மித்திரபேதம் செய்பவர்களும், புறம் கூறுபவர் களும், அரசை வருத்தும் குறுகில மன்னர்க்ளும், ராசத் துரோகிகளும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இவர்கள் காட்டில் இருத்தல் கூடாது. இவர்கள் வாழ இடங்கொடுக்காத காடே நல்ல நாடாகும். இவர்கள் நாட்டுக்குப் பாழ் செய்யும் உட்பகை வர் ஆவர். இவ்வாருன உட்பகைவர்களுக்குள்ளே பன்றி, கரடி, புலி முதலான விலங்குகளும் சேர்ந்த வையே. ஆகவே, மாறுபட்டுக் கூடும் கூட்டமும், உள் பகையும், குறும்பர்களும் கொடு விலங்குகளும் இல்லா மல் நாடு திகழ வேண்டும். இந்த முறையில்தான் நாடு இருத்தல் வேண்டும் என்பதை வினயக புராணமும் நமக்கு நன்கு எடுத்து இயம்புகிறது.