பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடு ## மையும், விளேவின் மிகுதியும், இன்பமும், காவல் உடைமையும் ஆகும். இன்பத்தினை விழாச் செய்த லாலும், யாகாதி செயல்களைப் புரிதலாலும், பெரி யோர்களேப் பெற்றிருத்தலாலும், நிலவளம் ர்ேவளம் மிக்கு இருப்பதாலும்,மாதர்கள்பால் இன்மொழியினே கேட்டலாலும், அழகினைக் காண்டலாலும், இதழை சுவைத்தலாலும், உச்சி மோத்தலாலும், உடலைத் தழுவுதலாலும் பெறலாம். விளவில்ை ஒரு சில தானி பங்களே மட்டும் பெறுதலில் பயன் இல்லை. நெல், புல், வரகு, தினே, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள், கொள்பயறு, உழுந்து, அவரை, கடலே, துவரை, மொச்சை முதலிய தானியங்கள் அனேத்தும் காட்டில் விளைதல் வேண்டும். விகளவு என்பது விளையக்கூடிய எல்லாவற்றையும் குறிப்பதாகும். செல்வம் என்பது பொன், பசு மட்டும் அன்று. வெளிநாடு சென்று திரும்பிவரும் வணிகர் கப்பலிலும், வண்டியிலும், கொணரும் பொருள்களும், குடிகள் குறைவின்றித்தரும் வரிப்பணமும் சுரங்கத்தினின்று கிடைப்பனவும் வயல் முதலியவற்றில் கிடைக்கும் தானிய முதலியனவும் மலைதரும் பொருள்களும், செல்வம் எனப்படும். - விழாக்கள் காட்டிற்கு அழகு தரும் என்பதை அறிவிக்கவே, இறையனர் அகப்பொருள் உரையாசிரி யரும், அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறை யூப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழர்வே என இவைபேர்ல் வனவாம்' என்று கூறியுள்ளார். இன்னுேரன்ன வளங்களும், அழகுகளும் உடையத் ாேடு என்பதை வற்புறுத்தவே வினயக புராணம்,