பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு #3 யின், பிற நாட்டை நாடிப் போகாமல் இருக்கலாம் அன்ருே பிற நாட்டை நாடி மக்கள் போதல் கூடாது. பொருள் செய்வார்க்கும் அஃது இடம் ' என்றல்லவோ சிந்தாமணி ஆசிரியரும் கூறியுள்ளார்? காவிரிப்பூம்பட்டினம் இம்முறையில் தன்னகத்து எல்லா வளங்களையும் கொண்டிருத்தலால், பிற நாடு புகா நிலையில் இருந்தது என்பதைத்தன் பெயரினலும் வெளிப்படுத்தி இருத்தலேப் பூம்புகார் என்னும் பெய. ரால் அறிகிருேம். அந் நாட்டு மக்கள் பிற நாடு செல் லார் என்பதை இளங்கோ அடிகளாரும், பதியெழு வறியாப் பழங்குடி கெழி இய பொதுவறு சிறப்பின் புகார் ” என்றனர். இதுவரை கூறியதில் இருந்து மேலே கூறப்பட் டவை அனைத்தும் ஒரு நாட்டின் இயல்பு என்பதை அறிந்தோம். ஆனால், இத்துணை நலனும் வளனும் பொருந்தி இருப்பினும், அந் நாட்டிற்கு அரசன் மிக மிக இன்றியமையாதவன். இக்கருத்தை முதுமொழி என்னும் நூல், - இறைசாரும் தென்னுடே நாடேனே காடு பிறவுடைய வேனும் பேருகாண் ; : என்று தெரிந்து கூறுகிறது. இவ்வாறு நாட்டிற்கு மிக மிக இன்றியமையாத அரசனது இயல்புகளே அறிந்து கொள்ளுதற்கு முன், அவன் வாழ் இட மாகிய அரணப்பற்றி முன்னர் அறிந்து, பின்னர் அவ் வரசனது இயல்பினே அறிவோமாக,