பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. அரண் அரண் என்பது நாட்டிற்கு ஓர் உறுப்பாக இருப் பதோடல்லாமல்,பகைவரால் அழிவு வந்துற்றபோது, நாட்டிற்கும், அரசனுக்கும் காப்பாகும் சிறப்பும் பெற்றதாகும். நாட்டுக்கு உரிய அரசன் எவ்வளவு வன்மை யுடையவனாயினும், அவனுக்கோ நாட் டிற்கோ பாதுகாக்கும் முறையில் அரண் அமையா திருந்தால், அழிவே ஏற்படும். அறிவு, ஆண்மை , செல் வம், படை என்னும் இம்முப்பெருமைகளைப் பெற்ற அரசன் பகை வேந்தர்மேல் போருக்குச் செல்லும் போதும், தனக்கு உரிமையுடைய மகளிரையும் பொருள்களையும் பிறர் கைப்பற்றக்கூடாத நிலையில் அரண் அமைந்து இருத்தல் இன்றியமையாதது. அரணுக்கு உள்ளிருந்தோ, அன்றி வெளியில் இருந் தோ, போர் செய்வார்க்கும் துணையாக அமைந்து பாதுகாவலாக இருத்தல் வேண்டும். மதில்மீது இருந்து பாதுகாப்பவர்க்கும் காவலாய் இருப்பதும் அரணுக்குச் சிறப்பாகும். வீரர்க்கு அரண் ஒரு சிறந்த பொருளாகும். பொருள் படைத்தவர்க்கும் அரணே துணைப் பொருளாகும். இத்தகைய தான அரணை அமைக்க வேண்டுவது அரசன் கடமை. பகைமேல் செல்லும் அரசன் ஒருவேளை பகைவரால் தோல்வி யுற்றபோது, நடுக்கடலில் அகப்பட்ட மரக் கலம் திசையறியாது கலங்குவதுபோலக் கலக்கம் உறவும் கூடும். அந்தத் தருணத்தில் அரசன் மீண்டும் தன் அரணில் வந்து தங்குதற்குரிய நிலையில் அவ் கலம் கிறபோது சன் ஒரு