பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரண் 15 வரண் பகைவர் கையில் சிக்காத நிலையில் விளங்குதல் இன்றியமையாதது. இத்தகைய சிறப்பியல்புகளுக்குக் காரணமான அரண் அமைவதற்கு, எவை எவை அவ்வரணில் பொருந்தப் பெற்றிருத்தல் இன்றியமையாதது என்று வினவலாம். அவற்றையும் இனிக் கூறுவோமாக. எக்காலத்தும் வற்றாத ஆழமும் உடைய அகழி யையும், நீர் இன்றி முள் ஆணி முதலியன பரப் பப்பெற்ற நிலப்பரப்பையும், குளிர்ந்த நிழலின் குளிர்ச்சியால் பகைவரையும் அகப்படுத்தி, துன் புறுத்தும் காட்டையும் கொண்ட நீரரண், நில வரண், மலையரண், காட்டரண் ஆகிய இந்நான்கும் சூழப்பெற்றிருப்பது அரணுக்குச் சிறப்பாகும். சுக்கிர நீதியும், அரணியலைப் பற்றிக் கூறும்போது, "நாற் புறமும் மிக அழகாகத் தோண்டி அமைக்கப்படுவது அகழி அரண்; நாற்புறத்தும் மிக்க நீர்ப்பரப்பினை உடையது நீரரண்; பிறர் உட்புக இயலாதவாறு பள்ளம், முள், கல் ஆகிய இவைகளால் அமைக்கப்படு வது களர் நில அரண்; நீரும் நிழலும் இல்லாமல் நாற்புறத்தும் உள்ள பாலையாகிய மருநிலம் நில வரண் ; மக்கள் வழக்கமில்லாத இடத்தில் நல்ல நீரைப் பிற்புறத்தே கொண்டு, மிக உயர்ந்திருப்பது மலையரண்; பெரிய முள்மரக் கூட்டங்கள் சூழ அமைக்கப்படுவது காட்டரண்" என்று கூறுகிறது. இவற்றுள் நீரும் நிலமும் மலையும் காடும் படைப்பி லேயே மூன்றற்குக் காவலாக அமைந்த இயற்கை அரண்கள். அகழியும் வெளி நிலனும் செய்குன்றும், ாது நீரரண்; - இவைகளால் இல்லாமல்