பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 வள்ளுவர் கண்ட அரசியல் காடு வளர்த்தலும் செயற்கை அரண்கள், நீர் அரணின் இன்றியமையாமையைச் சிறுபாணாற்றுப் படை, 4 மணிநீர் வைப்பு மாலொடு பெயரிய பனிநீர்ப் படுவில் பட்டினம்' என்றும், மதுரைக் காஞ்சி, 'மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின் " என்றும் கூறுகின்றன. சீவக சிந்தாமணி ஆசிரியர் அரணை ஒரு மாதாக உருவகப்படுத்தி, அகழ்கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்புரி புகழ்தரு மேகலை ஞாயில் பூண்முலை திகழ்மணிக் கோபுரம் திங்கள் வாள்முகம் சிகழிகை நெடுங்கொடி செல்விக்கு என்பவே. என்று கூறியுள்ளார். சிறு பஞ்சமூலம் நால்வகை யரணுடன் மக்களும் இணைக்கப்பட்டு ஐந்து ஆக்கி, இவ் வைந்தினையும் அரணாக உடையவனையே வேந்தனாக நாட்டுக என் பதை, நீண்டநீர், காடு, களர் நிவந்து விண்தோயும் மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு- மாண்டவர் ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையான வேந்தனா நாட்டல் விதி என்ற பாட்டின் மூலம் கூறுகிறது. மேலே கூறப்பட்ட நால்வகை அரண்களுள் மதில் அரண் எவ்வாறு இருக்கவேண்டும் எனில், பகை வர்கள் ஏணி சாத்தி ஏறி, உள்ளேவர இடங்கொடாத